மெஸ்ஸியின் சிறப்பான ஆட்டம்: சாம்பியன்ஸ் கோப்பையில் இன்டர் மியாமி முன்னேற்றம்!
சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இன்டர் மியாமி 3-1 என கான்சாஸ் சிட்டியை வீழ்த்தியது.
கான்காகேஃப் சாம்பியன்ஸ் கப் முதல் சுற்றில் இன்டர் மியாமி அணியும் கான்ஸ்டாஸ் சிட்டி அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்த்து வென்றது.
தற்போது அமெரிக்காவின் சேஸ் திடலில் 2ஆவது லெக் சுற்றில் கான்ஸ்டாஸ் சிட்டியை 3-1 வீழ்த்தியது. இண்டர் மியாமி அணிக்காக முதல் கோலை மெஸ்ஸி ஆட்டத்தின் 19ஆவது நிமிஷத்தில் அடித்தார்.
அடுத்ததாக அல்லெண்டே, சௌரேஸ் 45+1, 45+3 ஆகிய நிமிஷங்களில் தொடர்ச்சியாக கோல் அடித்து அசத்தினார்கள்.
கான்ஸ்டாஸ் சிட்டி சார்பில் மெமோ ரோட்ரிகீஸ் மட்டும் 63ஆவது நிமிஷத்தில் ஒரு கோல் அடித்தார்.
கான்சாஸ் சிட்டியின் பயிற்சியாளர் மெஸ்ஸியை பாராட்டி பேசினார்.
வயதானாலும் இரண்டு போட்டிகளிலும் அதிக நேரம் விளையாடிய மெஸ்ஸி, சௌரேஸ் அசத்தினார்கள்.
இன்டர் மியாமி அணி அடுத்ததாக ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு தேர்வாகியுள்ளது. அடுத்த போட்டி மார்ச் 6ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
An electric night at Chase Stadium ⚽️
— Inter Miami CF (@InterMiamiCF) February 26, 2025
Read more about our win against Kansas here: https://t.co/rWEVA5yvSQpic.twitter.com/LLJp3X3T5x