செய்திகள் :

மேட்டுப்பாளையம் அருகே பிக்கப் வாகனம் கவிழ்ந்ததில் தந்தை, மகன் பலி

post image

மேட்டுப்பாளையம் அருகே பிக்கப் வாகனம் சாலையில் கவிழ்ந்த விபத்தில் தந்தை, மகன் இருவர் பலியாகினர்.

கோவை மாவட்டம், சிறுமுகை அருகே உள்ள கூத்தாமண்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் பாபு (35). இவரது மகன் சாய் மித்திரன் (5). கோவை சின்ன தடாகம் எம்.ஜி.ஆர் பகுதியைச் சேர்ந்தவர் மந்திராசலம் மகன் குகன் (20). இவர்கள் சிறுமுகை அருகே சென்னம்பாளையம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சுப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நேற்று வந்துள்ளனர்.

பின்னர் அங்கு உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது தனது 5 வயது மகன் அங்கிருந்து பிக்கப் வாகனத்தில் சுற்றி காட்ட தந்தையிடம் கேட்டுள்ளார். அப்போது உறவினரின் பிக்கப் வாகனத்தை வாங்கிக் கொண்டு கார்த்திக் பாபு, மகன் சாய் மித்ரன் மற்றும் குகன் ஆகியோர் பிக்கப் வாகனத்தில் சென்றுள்ளனர். வாகனம் சென்னம்பாளையத்தில் இருந்து வெள்ளிகுப்பம் பாளையம் வரை சென்று அங்கிருந்து தொட்டபாவி செல்லும் சாலையில் சென்றுள்ளனர்.

சென்னை புறநகர் ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

அந்த சாலையில் வளைவு ஒன்றில் திரும்ப முயன்ற போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சாய் மித்ரன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானான். மேலும் படுகாயம் அடைந்த நிலையில் கார்த்திக் பாபு, குகன் ஆகியோர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் சிகிச்சை பலனின்றி கார்த்திக் பாபு பலியானார். மேலும் குகன் என்பவர் காயமடைந்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து சிறுமுகை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்தமானில் மோசமான வானிலை: மீண்டும் சென்னை திரும்பிய விமானம்

சென்னை: சென்னையிலிருந்து அந்தமான் சென்ற விமானம், அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக மீண்டும் சென்னையில் தரையிறங்கியது. சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திலிருந்து திங்கள்கிழமை அதிகாலை 4.40 மண... மேலும் பார்க்க

தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!

முதல்வர் மு. க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திங்கள்கிழமை(மார்ச் 3) இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, சென்னையிலுள்ள ஒரு தனியார் மர... மேலும் பார்க்க

தமிழகத்தை நம்பர் ஒன் கடன்கார மாநிலமாக மாற்றியுள்ளது திமுக: அண்ணாமலை

தமிழகத்தை நம்பர் ஒன் கடன்கார மாநிலமாக திமுக மாற்றி வைத்திருக்கிறது என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.கமிஷன் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் தங்கம் தென்னரசு இடையே சமூக வலைதளத்தில் பரபரப்பான... மேலும் பார்க்க

தவெக சார்பில் இஃப்தார் நோன்பு: விஜய் பங்கேற்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மார்ச் 7 ஆம் தேதி நடைபெறவுள்ள இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கவுள்ளார்.இது குறித்து தவெக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவ... மேலும் பார்க்க

ராமஜெயம் கொலை வழக்கு: புலன் விசாரணை அதிகாரிகள் மாற்றம்!

அமைச்சா் கே என். நேருவின் சகோதரர் கே என். ராமஜெயம் கொலை வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகளை மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2012ஆம் ஆண்டு கே.என். ராமஜெயம், நடைப்பயிற்சி சென்றபோது அட... மேலும் பார்க்க

உங்க கமிஷன் எவ்வளவு? மாறி மாறி குற்றம் சாட்டும் திமுக - பாஜக!

கமிஷன் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் தங்கம் தென்னரசு இடையே சமூக வலைதளத்தில் பரபரப்பான காரசார விவாதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழக அரசு, மக்கள் மீது சுமத்தியுள்ள மொத்த கடன் 9.5 லட்சம் கோ... மேலும் பார்க்க