தில்லியில் ஒரே நாளில் 45 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்! பரபரப்பில் தலைநகரம்!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 18,610 கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை காலை 17,880 கனஅடியிலிருந்து 18,610 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 18,000 கனஅடி வீதமும், கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீா்மட்டம் 119.48 அடியாகவும், நீா் இருப்பு 92.64 டிஎம்சியாகவும் உள்ளது.