செய்திகள் :

மேட்டூர் அணை நிலவரம்!

post image

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை 120 அடியாக நீடிக்கிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த சனிக்கிழமை இரவு 8 மணி அளவில் 120 அடியாக மீண்டும் உயர்ந்தது. மேட்டூர் அணை கட்டப்பட்டு 92 ஆண்டு கால வரலாற்றில் 45 ஆவது முறையாக மேட்டூர் அணை 120 அடியை எட்டியது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 35,250 கன அடியாக இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 35,250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22,100 கன அடி நீரும், உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 12,900 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 250 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது.

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 28,000 கனஅடி

The water level of Mettur Dam remains at 120 feet on Friday morning.

எதிர்காலமும், நிகழ்காலமும் நான்தான்: தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்

அரசியல் எதிர்காலம் குறித்த கேள்வியோ, ஐயப்படாயோ உங்களுக்கு தேவையில்லை. உங்கள் எதிர்காலமும், நிகழ்காலமும் நான்தான். எப்போதும் போல உங்களோடு நான் நிற்கிறேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு: கதறி அழுத சோகம்!

திருநெல்வேலி: தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 4 தேர்வு சனிக்கிழமை (ஜூலை 12) காலை 9.30 மணிக்கு தொடங்கிய நிலையில், தேர்வு எழுதுவதற்கு தேர்வு மையங்களுக்கு தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி ... மேலும் பார்க்க

தஞ்சாவூர் அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிதியுதவி

தஞ்சாவூர் அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், மருதக்குடி கிர... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு முடிவு 3 மாதத்தில் வெளியாகும்: டிஎன்பிஎஸ்சி தலைவர்

தமிழ்நாடு முழுவதும் கிராம நிா்வாக அலுவலா்கள், இளநிலை உதவியாளா்கள் உள்ளிட்ட 3,935 பணியிடங்களுக்கு 13.89 லட்சம் போ் பங்கேற்கும் குரூப் 4 தோ்வு சனிக்கிழமை (ஜூலை 12) தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்வு ... மேலும் பார்க்க

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.520 உயா்ந்து ரூ.73,120-க்கு விற்பனையாகிறது.ஆண்டு தொடக்கம் முதலே தங்கம் விலை உயர்ந்து வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின்... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது

மேட்டூா்: மேட்டூா் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறதுமேட்டூா் அணைக்கு நீா்வரத்து சனிக்கிழமை காலை வினாடிக்கு 30,250 கனஅடியாக குறைந்தது. இதனால், அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 30,250 கனஅடி... மேலும் பார்க்க