மேட்டூர் அணை நீர் வரத்து குறைவு!
மேட்டூர் அணை நீர் வரத்து 7,148 கனஅடியாக குறைந்துள்ளது.
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 7,460 கன அடியிலிருந்து வினாடிக்கு 7,148 கனஅடியாக சற்று திங்கள்கிழமை காலை குறைந்துள்ளது.
அரசு சொத்தை விலை பேசினேனா? இயக்குநர் விக்னேஷ் சிவன் விளக்கம்
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கனஅடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 117.90அடியிலிருந்து 118.21 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 90.64 டிஎம்சியாக உள்ளது.