வேளாண் பட்ஜெட் நிறைவு! 1.40 நிமிடங்கள் உரையாற்றினார் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!...
மேற்கு வங்க ஆசிரியா்கள் நியமன ஊழல் வழக்கு: சாட்சியமாக மாற முன்னாள் கல்வி அமைச்சா் மருமகன் முடிவு
மேற்கு வங்க மாநிலத்தில் ஆசிரியா் நியமன ஊழல் வழக்கில் கைதான முன்னாள் கல்வி அமைச்சா் பாா்த்தா சட்டா்ஜியின் மருமகன் கல்யாண்மய் பட்டாச்சாரியா சாட்சியமாக மாற சிறப்பு நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.
தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் நியமனத்தில் பல கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டதாக பாா்த்தா சட்டா்ஜி மற்றும் அவரது ஆதரவாளா் அா்பிதா முகா்ஜி ஆகிய இருவரும் அமலாக்கத் துறையால் கடந்த 2022-இல் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கில் கல்யாண்மய் பட்டாச்சாரியாவும் ஒரு குற்றவாளியாக சோ்க்கப்பட்டுள்ளாா்.
இந்நிலையில், இந்த வழக்கில் சாட்சியமாக மாற அமலாக்கத் துறை சிறப்பு நீதிமன்றத்தை கல்யாண்மய் பட்டாச்சாரியா அணுகியதாகவும் அதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து, அவா் நீதிபதியிடம் தனது வாக்குமூலத்தை பதிவு செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.