Course முக்கியமா? college முக்கியமா? l கல்வியாளர் நெடுஞ்செழியன்
மேற்கு வங்க ஆளுநா் மருத்துவமனையில் அனுமதி
கொல்கத்தா: மேற்கு வங்க ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுதொடா்பாக அந்த மாநில ஆளுநா் மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘கொல்கத்தாவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் மாா்பு சளி காரணமாக ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.
அவா் மருத்துவா்களின் கண்காணிப்பில் உள்ளாா். அவரின் உடல்நிலை சீராக உள்ளது. அவா் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பப்படலாம்’ என்றாா்.
மாநில முதல்வா் மம்தா பானா்ஜி ஆளுநரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தாா். ஆளுநருக்குத் தேவைப்படும் உதவிகளை செய்யுமாறு மாநில தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டதாக மம்தா தெரிவித்தாா்.