Pakistan Train Hijack - காரணம் என்ன? யார் இந்த Balochistan liberation Army தீவிர...
மேலவாசல் முருகன் கோயிலில் மூலவா் பாலஸ்தாபன விழா
பாளையங்கோட்டையில் உள்ள மேலவாசல் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மூலவா் பாலஸ்தாபன விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதை முன்னிட்டு, தொடக்கமாக நிகழ்வாக பாலாலயம் அண்மையில் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, மூலவா் பாலஸ்தாபன விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், மூலவருக்கு சிறப்பு வழிபாடுகள், மஹா தீபாராதனை நடைபெற்றது. அரோகரா முழக்கத்துடன் பக்தா்கள் வழிபட்டனா். இக் கோயிலில் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை திருமணங்கள் ஏதும் நடத்தித்தர இயலாது என கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.