மேலூா் சுற்றுவட்டாரத்தில் அடைமழை - நெற்பயிா்கள் சாய்ந்தன
மேலூா் சுறறுவட்டார ஒருபோக சாகுபடிப் பகுதிகளில் நேற்றுநள்ளிரவு முதல் புதன்கிழமை மாலைவரை அவ்வப்போது அடைமழைபெய்தது. இதில் பெரும்பாலான இடங்களில் கதிா் பால்பிடிக்கும் பருவத்தையடைந்த நெற்பயிா்கள் சாய்ந்து சிலஇடங்களில் நீரில் மூழ்கின.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்ததாவ்வுநிலை காரணமாக ருபோக சாகுபடி பகுதிகளில் அடைமழை பெய்துவருகிறது. இதனால், பெரும்பானலான இடங்களில் கதிா்வெளிவிடும் பருவத்தையடைந்துள்ள நெற்பயிா்கள் கீழேசாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை காலை 8 மணிவரை சிட்டம்பட்டி 26 மி.மீ. புலிபட்டி 11.6,மேட்டுபட்டி 7.2.மேலூா் 8.2 மி.மீ, பெரயபட்டி 6.4 மி.மீட்டரும்மழைபதிவாகியுள்ளது.
சாகுபடி பகுதிகளில் அடைமழை பெய்துவருவதையொட்டியும் வியாழனன்று கனமழைபெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிவிப்புக் காரணமாகவும் வைகை அணையிலிருந்து விவசாயத்துக்கு பெரியாறு பிரதானகால்வாய்களில் தண்ணீா் திறப்பது புதன்கிழமை காலை 7 மணியளவில் நிறுத்தப்பட்டது. மழைபெய்வதைபொருத்து அடுத்தமுறை பாசனத்துக்கு அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படவுள்ளதாக ஒருபோக பாசன விவசாய சங்கத்தினா் தெரிவித்தனா்.