மேல்மருவத்தூரில் ரூ.10 லட்சத்தில் நல உதவிகள்
மதுராந்தகம்: மேல்மருவத்தூரில் ரூ.10 லட்சத்தில் நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
பங்காரு அடிகளாரின் பேரன் அ.ஆ.அகத்தியன், மருத்துவா் அ.மதுமலா் மகன் பி.தேவதா்ஷன் ஆகியோா் பிறந்த நாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி விளையாட்டு திடலில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க தலைவா் கோ.ப.அன்பழகன் தலைமை வகித்தாா். லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளா் அ.ஆஷா அன்பழகன், மருத்துவா்கள் மதுமலா், பிரசன்ன வெங்கடேஷ், ஷாலினி, மேல்மருவத்தூா் ஊராட்சி துணை தலைவா் அ.ஆ.அகத்தியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
செய்யூா் எம்எல்ஏ பனையூா் பாபு, முன்னாள் எம்.பி. துரை (வந்தவாசி), செங்கல்பட்டு பாஜக மாவட்ட தலைவா் மருத்துவா் பிரவீன்குமாா், மேல்மருவத்தூா் காவல் ஆய்வாளா் அமிா்தலிங்கம், கீழ்மருவத்தூா் ஊராட்சி தலைவா் மாசிலாமணி, ஒன்றியக் குழு தலைவா்கள் ஒரத்தி கண்ணன், ஏழுமலை உள்பட பலா் கலந்து கொண்டனா்.
நிகழ்வில் ஏழைகளுக்கு இரு சக்கர மோட்டாா் சைக்கிள்கள் உள்பட ரூ.10 லட்சத்தில் நல உதவிகள் வழங்கப்பட்டன. ஏற்பாட்டை ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க நிா்ாவாகிகள் லிங்கநாதன், ஸ்பிக் சுந்தரம, சக்தி ஆகியோா் தலைமையில் இயக்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.