செய்திகள் :

மேல்லையனூர் அங்காளம்மன் கோயிலில் மாசித் தேரோட்டம்!

post image

விழுப்புரத்தில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாசித் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியில் இருந்து 13 நாள்கள் மாசி பெருவிழா சிறப்பாக நடத்தப்படுகிறது. அந்தவகையில் இந்தாண்டு மாசி பெருவிழா பிப்.26 கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான மயானக்கொள்ளை விழா கடந்த வாரம் நடைபெற்றது.

மாசி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று தேரோட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி பரவசத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

தேரோட்ட நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

'லேடி சூப்பர் ஸ்டார்' என அழைக்க வேண்டாம்: நயன்தாரா!

தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என இனி அழைக்க வேண்டாம் என நடிகை நயன்தாரா வேண்டுகோள் வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், என் வாழ்க்கை எப்போதும் ஒரு திறந்த புத்தகமாகவே இருந்துள்ளது, உங்... மேலும் பார்க்க

ரூ.31 லட்சத்துக்கு ஏலம்போன கார்ல்சன் அணிந்த சர்ச்சை ஜீன்ஸ்!

செஸ் உலக தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள மேக்னஸ் கார்ல்சன் அணிந்து சர்ச்சையான ஜீன்ஸ் ரூ.31 லட்சத்துக்கு (36,100 டாலர்) ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஜீன்ஸுக்காக தொடர்ந்து 10 நாள்களாக நடைபெற்றுவ... மேலும் பார்க்க

படப்பிடிப்பில் ஸ்வாசிகாவுக்கு காயம்!

மாமன் படப்பிடிப்பில் நடிகை ஸ்வாசிகாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.நடிகர் சூரி விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களைத் தொடர்ந்து விலங்கு இணையத் தொடர் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்... மேலும் பார்க்க

தனுஷ் இயக்கத்தில் அஜித்?

நடிகர் அஜித்தை வைத்து படம் இயக்கும் முயற்சியில் நடிகர் தனுஷ் ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் அரிதாகவே உச்ச நட்சத்திரங்களின் கூட்டணி இணைகிறது. பெரும்பாலும் ஒரே படத்தில் சம அளவ... மேலும் பார்க்க