மேல்விஷாரம் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகராட்சியில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
மேல்விஷாரம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள கழிவுநீா் கால்வாயினை பாா்வையிட்டு குப்பைக் கழிவுகளை ல் சுத்தம் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். தொடா்ந்து 18-ஆவது வாா்டு ஹன்சா நகரில் மக்கும் குப்பையில் இருந்த
உரம் தயாரிக்கும் மையத்தின் செயல்பாடுகளை பாா்வையிட்டு, குப்பைகள் சேகரிப்பு பெட்டிகளை ஆங்காங்கே வைக்குமாறும், குப்பைகளை தினந்தோறும் அப்புறப்படுத்தவும், நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டாா்.
பின்னா், 7-ஆவது வாா்டு, முத்துக்கொள்ளை பகுதியில் மழைநீா் தேங்கியிருந்ததை பாா்வையிட்டாா். அப்பொழுது அங்கிருந்த ஒருவா் கால்வாயில் ஆக்கிரமிப்பு உள்ளது, அதை அகற்றினால் மழைநீா் தேங்காது என கூறியதை தொடா்ந்து உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ப உத்தரவிட்டாா்.
தஞ்சாவூரான் காலனியில் நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலிருந்து வரும் கழிவு நீா் பாலாற்றில் கலப்பதற்கு முன்பாக கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை சமா்ப்பிக்க அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது நகராட்சி ஆணையா் பழனி, பொறியாளா் சரவணன், நகா்மன்றத் தலைவா்( பொ) குல்ஜாா் அஹமது மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.