ஆசிய கோப்பையை இந்தியாவிடம் வழங்க வலியுறுத்தும் பிசிசிஐ; மறுக்கும் மோஷின் நக்வி!
மேஷம், கடகம், துலாம், தனுசு, கும்பம்: அதிசார குருபெயர்ச்சி பரிகாரம் - ஸ்ரீகாலபைரவ பூஜை
அக்டோபர் 18 முதல் மிதுனத்திலிருந்து கடகத்துக்குப் பெயர்கிறார் குருபகவான். இதுவே அதிசார குருபெயர்ச்சி எனப்படுகிறது. அப்போது குருபகவான் சஞ்சாரப்படி மேஷம், கடகம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய 5 ராசிக்காரர்கள் அவசியம் பரிகாரம் செய்துகொள்ள வேண்டும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அதுவும் காலபைரவ பூஜை முக்கியம் என்கிறது. அது பற்றிய விவரங்கள் இங்கே...
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
வாசகர்கள் கவனத்துக்கு:

ஐஸ்வர்ய யோகம் தரும் குருபகவான், எப்போதுமே நன்மைகளைச் செய்வார். எந்த கிரகம் வலுவிழந்தாலும், குரு மட்டும் வலுவிழக்கக் கூடாது என்பார்கள். நற்பலன்களைத் தருவதில் முதன்மையானவர் குருபகவான். ஜாதகத்திலோ, கோசார நிலையிலோ குரு பகவான் வலுவிழந்து போனால், கிடைக்கவேண்டிய நற்பயன்கள் கிடைக்காமல் போகும். அடுத்த குருபெயர்ச்சி வரை இது நடக்கும். ஆனால் இடையில் நடைபெறும் அதிசார குருப்பெயர்ச்சி சில நன்மைகளை உருவாக்கும் என்பர்.
அந்தவகையில் தற்போது அக்டோபர் 18-ம் தேதி அதிசார குருபெயர்ச்சி நிகழவுள்ளது. அப்போது கடகத்தில் வரும் குருபகவான், டிசம்பர் 5-ம் தேதி வரை அங்கேயே இருந்து பலன் தரப்போகிறார். அதன்பின் மிதுன ராசிக்கு மீண்டும் வருவார். குருவின் அதிசார காலம் 48 நாள்களும் குரு கடகத்தில் சஞ்சரித்து அற்புத பலன்களைத் தரப்போகிறார். இதில் மிதுனம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ராசிக்காரர்களுக்கு யோக பலன்கள் அதிகரிக்கும்.
அதேசமயம் மேஷம், கடகம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய 5 ராசிக்காரர்கள் கட்டாயம் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். காரணம் இவர்களுக்கு குருவின் பார்வை பலவீனமாக இருப்பதே. இதுவரை சனியால் அவதிப்பட்ட இந்த ராசிக்காரர்கள் இனி குருவின் அருளால் நன்மை பெற கட்டாயம் சிறந்த பரிகாரங்களை செய்ய வேண்டும் என்கிறது ஜோதிடம். அப்படி என்ன செய்யலாம்.

தேய்பிறை அஷ்டமியில் காலபைரவ பூஜை செய்து வழிபட்டால் சனியின் துன்பம் குறைந்து குருவின் கருணை கடாட்சம் பெருகும் என்பது நம்பிக்கை. நவகிரகங்களும் பைரவரின் அங்கங்களாக இருப்பதால் பைரவரை அவருக்குரிய தேய்பிறை அஷ்டமி நாளில் வழிபட நலன்கள் யாவும் கூடும் என்பது உறுதி. மேலும் 12 ராசிகள்; 27 நட்சத்திரங்கள் யாவற்றுக்கும் பைரவரே அதிபதி என்பதால் ஒவ்வொருவரும் தங்களுக்குரிய ராசி, நட்சத்திரத்துக்கென பரிகாரம் செய்து கொள்ளாமல் பைரவருக்கு பூஜை செய்தாலே போதும் என்கிறது ஜோதிட சாஸ்த்திரம்.
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
வாசகர்கள் கவனத்துக்கு:
அந்த வகையில் வரும் அதிசார குருபெயர்ச்சி சகலருக்கும் நன்மைகள் தர, அவர்களின் துன்பங்கள் நீங்க 14-10-2025 செவ்வாய்க்கிழமை தேய்பிறை அஷ்டமி நன்னாளில் அவல்பூந்துறை ஊரை அடுத்த ராட்டைச் சுற்றிபாளையம் ஆலயத்தில் மகாகால பைரவ பூஜை நடைபெற உள்ளது. 14-10-2025 செவ்வாய்க்கிழமை தேய்பிறை அஷ்டமி நன்னாளில் அவல்பூந்துறை ஊரை அடுத்த ராட்டைச் சுற்றிபாளையம் ஆலயத்தில் மகாகால பைரவ பூஜை நடைபெற உள்ளது.
தென்னக காசி என்று போற்றப்படும் இந்த ஆலயம், காசியைப் போலவே மயானத்தை அடுத்துள்ளது. அனுமன் நதியை அடுத்துள்ளது. அஷ்ட பைரவரும் காசியைக் காவல் புரிவது போல அவல்பூந்துறை ராட்டைச் சுற்றிபாளையம் ஸ்ரீகாலபைரவரும் தமிழகத்தைப் பாதுகாத்து வருகிறார் என்பது நம்பிக்கை.சிறப்பினும் சிறப்பாக வேறெங்கும் காண முடியாத வகையில் மிகப்பெரிய பைரவர் சிலை 39 அடி உயரத்தில் இங்கு அமைந்துள்ளது.

மேலும் ஆலய முகப்பு, கருவறை, பிராகார மண்டபத்தின் மேற்பகுதியில் என இந்த ஆலயத்திலேயே 64 பைரவர்களையும் தரிசிக்க முடியும் என்பதும் சிறப்பு. ஸ்ரீஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த பைரவ வழிபாடு கவலைகள் நீக்கும் பரிகார வழிபாடு. ராகு-கேதுவை முப்புரி நூலாக அணிந்து, மழு, பாசம், சூலம், தண்டம் ஏந்தி வழிபட்டோருக்கு வளம் சேர்க்கும் அற்புத தெய்வம் காலபைரவர்.
இந்த பூஜையில் சங்கல்பம் செய்து கொண்டால் உங்கள் விருப்பங்கள் யாவும் நிறைவேறும். ஜாதக பிரச்னைகள் தீரும். இங்கு அளிக்கப்படும் பச்சை வண்ண ஆகர்ஷண குங்குமம் உங்களை வெற்றியாளராக மாற்றும். இங்கு அளிக்கப்படும் ரட்சை உங்களுக்கு காவலாக நின்று கவலைகள், அச்சங்களை விலக்கும்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு பைரவ ஆகர்ஷண குங்குமம், விசேஷ ரட்சை, அட்சதை அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).
வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan