Inbox 2.0 : Eps 29 - Coolie Teaser-காக வீடியோவை தள்ளி வச்சிட்டோம்?! | Cinema Vik...
மே.இ.தீவுகளை வீழ்த்தி தொடரை சமன்செய்தது வங்கதேசம்!
மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி தொடரை சமன்செய்தது வங்கதேசம்.
மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்தத் தொடரில் முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிபெற்ற நிலையில் 2-வது போட்டி சபினா பார்க் மைதானத்தில் நடைபெற்றது.
இதில், டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்து 164 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஷட்மன் இஸ்லாம் 64 ரன்கள் எடுத்தார். ஜேடன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தனது முதல் இன்னிங்ஸை ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 146 ரன்களுக்கு ஆல் -அவுட் ஆன நிலையில் 18 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணி 268 ரன்களுக்கு ஆல்-ஆவுட் ஆனது. ஜேக்கர் அலி 91 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
பின்னர் 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 185 அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், வங்கதேச அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
வங்கதேச தரப்பில் தைஜுல் இஸ்லாம் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 6 விக்கெட்டுகளை வீழ்த்திய தைஜுல் இஸ்லாம் ஆட்டநாயகன் விருதையும், தஸ்கின் அகமது தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.
இவ்விரு அணிகளும் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி கிழக்கு நெப்ராஸ்காவில் உள்ள வெர்னர் பார்க்கில் வருகிற டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெறவுள்ளது.