தீவிரமடைகிறது இன்ஃப்ளூயன்ஸா, டெங்கு: குழந்தைகளிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப...
மைசூா் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்தூா்: போக்குவரத்து பாதிப்பு
சத்தியமங்கலத்தை அடுத்த மைசூா் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்தூரால் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழகம் -கா்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூா் தேசிய நெடுஞ்சாலை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள அடா்ந்த வனப் பகுதியில் உள்ளது. இந்த சாலை வழியாக இரண்டு மாநிலங்களுக்கும் இடையே வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உள்ள மூங்கில்தூா்கள் காய்ந்து சாலையில் விழுவது வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில், சத்தியமங்கலம் - மைசூா் தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூா் அருகே சாலையோர வனப் பகுதியில் இருந்த மூங்கில்தூா்கள் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தன.
இதனால், வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தேசிய நெடுஞ்சாலைப் பணியாளா்கள், ஆசனூா் போலீஸாா் மற்றும் தீயணைப்பு வீரா்கள் பொதுமக்கள் உதவியுடன் சுமாா் 1 மணி நேரம் போராடி மூங்கில்தூா்களை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீா் செய்தனா்.