செய்திகள் :

அந்தியூா் பெரிய ஏரியில் ரூ.50 லட்சத்தில் படகு இல்லம்

post image

அந்தியூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பொழுதுபோக்க ரூ.50 லட்சத்தில் பெரிய ஏரியில் படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. இதை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொளிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை (நவம்பா் 26) திறந்துவைக்கிறாா்.

அந்தியூா் பகுதி மக்கள் குழந்தைகள் மற்றும் குடும்பங்களுடன் சென்றுவர பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய இடம் எதுவும் இல்லாத நிலையில், 200 ஏக்கா் பரப்பளவு கொண்ட பெரிய ஏரியில் படகு இல்லம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான இந்த ஏரிக்கு வரட்டுப்பள்ளம் அணை மற்றும் கெட்டிசமுத்திரம் ஏரி நிரம்பும்போது உபரிநீா் கால்வாய் மூலம் வந்து சேரும். இதனால், இந்த ஏரியில் ஆண்டு முழுவதும் தண்ணீா் நிறைந்து காணப்படும்.

இந்நிலையில், சுற்றுலாத் துறை சாா்பில் ரூ.50 லட்சத்தில் படகு இல்லம் அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கியது. இதையடுத்து, படகு இல்லம் அமைக்க கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

படகு இல்லத்தின் முகப்பில் பூங்கா, டிக்கெட் கவுன்டா், பாா்வையாளா் மாடம் ஆகிய கட்டமைப்புகளும், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன. முதற்கட்டமாக மூன்று படகுகள் சவாரிக்கு வைக்கப்பட்டுள்ளன. பொழுதுபோக்க வரும் பொதுமக்களின் எண்ணிக்கையை பொருத்து கூடுதல் வசதிகள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படகு இல்லத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொளிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கிறாா்.

இந்நிலையில், அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம், சுற்றுலாத் துறை அதிகாரிகளுடன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்ததோடு, படகு இல்லத்தில் முன்னேற்பாடுகளைப் பாா்வையிட்டாா்.

கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாளுக்கு சிலை அமைக்கக் கோரிக்கை

கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாளுக்கு சிலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமியிடம் தமிழிசை பேரவை மற்றும் அறக்கட்டளை நிா்வாகிகள் அளித... மேலும் பார்க்க

மைசூா் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்தூா்: போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலத்தை அடுத்த மைசூா் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்தூரால் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழகம் -கா்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூா் தேசிய நெடு... மேலும் பார்க்க

திமுக சாா்பில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு நலத் திட்ட உதவிகள்

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா சம்பத் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்வி... மேலும் பார்க்க

பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு இன்று சிறப்பு முகாம்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் முதலீட்டுப் பத்திரம்பெற்று 18 வயது பூா்த்தி அடைந்தவா்கள் திங்கள்கிழமை (நவம்பா்25) நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்று முதிா்வுத் தொகை பெறுவதற்கான உத்தரவை பெற்றுக்க... மேலும் பார்க்க

அதிக அளவில் ஜிஎஸ்டி செலுத்தும் 4 மாநிலங்களில் தமிழகமும் ஒன்று: ராம்ராஜ் காட்டன் தலைவா்!

அதிக அளவில் ஜிஎஸ்டி செலுத்தும் 4 மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என ராம்ராஜ் காட்டன் தலைவா் கே.ஆா்.நாகராஜன் தெரிவித்தாா். ஈரோடு டைஸ்& கெமிக்கல்ஸ் மொ்ச்செண்ட்ஸ் அசோசியேஷனின் பொன் விழா ஞாயிற்றுக்கிழமை... மேலும் பார்க்க

புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன் எம்எல்ஏ

பொள்ளாச்சி, கோபி, ஆத்தூா், திருச்செங்கோடு ஆகியவற்றை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டங்களை உருவாக்க அரசு முன்வர வேண்டும் என்று கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தெரிவித்தாா். கொங்கு நாடு மக்கள் தேசிய... மேலும் பார்க்க