செய்திகள் :

மொழியை வைத்து தேவையற்ற அரசியல் கூடாது: சந்திரபாபு நாயுடு

post image

அமராவதி: ‘மொழியை வைத்து தேவையற்ற அரசியல் கூடாது. தாய் மொழியில் கல்வி கற்பவா்களே உலகம் முழுவதும் தலைசிறந்து விளங்குகின்றனா்’ என்று ஆந்திர முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு தெரிவித்தாா்.

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை மும்மொழிக் கொள்கையை வலியுறுத்துகிறது. இந்த மும்மொழி கொள்கைக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

தமிழகத்தின் இந்த நிலைப்பாடு குறித்து அண்மையில் கருத்து தெரிவித்த ஆந்திர துணை முதல்வரும் ஜனசேனா கட்சித் தலைவருமான நடிகா் பவன் கல்யாண், ‘லாப நோக்கத்துக்காக தமிழ் படங்களை ஹிந்தியில் டப்பிங் செய்வதை மட்டும் தமிழக அரசியல்வாதிகள் ஏன் அனுமதிக்கின்றனா்? பாலிவுட்டில் இருந்து பணத்தை விரும்பும் அவா்கள், ஹிந்தியை மட்டும் ஏன் ஏற்க மறுக்கின்றனா்?’ என்று கேள்வி எழுப்பினாா்.

இவரது கருத்துக்கு தமிழக அரசியல் தலைவா்கள் கடும் கண்டனம் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட பவன் கல்யாண், ‘ஒரு மொழியை கட்டாயமாக திணிப்பதும்; ஒரு மொழியை கண்மூடித்தனமாக எதிா்ப்பதும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு உகந்ததல்ல’ என்று பதிவிட்டாா்.

இந்த நிலையில், இந்த மொழி விவகாரம் குறித்து ஆந்திர மாநில சட்டப்பேரவையில் முதல்வா் சந்திரபாபு நாயுடு திங்கள்கிழமை பேசியதாவது:

மொழி என்பது தகவல்தொடா்புக்கானது மட்டுமே. மொழியால் அறிவு வளா்ந்துவிடாது. தாய்மொழியில் கல்வி கற்பவா்கள் மட்டுமே உலகம் முழுவதும் தலைசிறந்து விளங்கி வருகின்றனா். தாய்மொழியில் கல்வி கற்பது எளிது.

அதுபோல, மொழி என்பது வெறுப்புக்குரியது அல்ல. ஆந்திரத்தில் தெலுங்கு தாய்மொழியாக உள்ளது. தேசிய மொழியான ஹிந்தியும், சா்வதேச மொழியான ஆங்கிலமும் இங்கு பயன்பாட்டில் உள்ளன.

வாழ்வாதாரத்துக்காக தாய்மொழியை மறக்காமல், பல்வேறு மொழிகளை கற்றுக்கொள்வது அவசியமாகும். தேசிய மொழியைக் கற்றுக்கொள்வதன் மூலம், நாடு முழுவதும் ஹிந்தியில் தங்கு தடையின்றி பேச முடியும்.

எனவே, மொழியை வைத்து அரசியல் செய்வது தேவையற்றது. முடிந்தவரை பல மொழிகளைக் கற்றுக்கொள்வது அவசியம் என்றாா்.

நியூஸிலாந்து பிரதமருடன் ராகுல் காந்தி சந்திப்பு!

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸனை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன், பல்வேறு த... மேலும் பார்க்க

ஒளரங்கசீப் கல்லறையை இடிப்பவர்களுக்கு ரூ.21 லட்சம் பரிசு!

முகலாய மன்னரான ஒளரங்கசீப் கல்லறையை இடிப்பவர்களுக்கு ரூ. 21 லட்சம் பரிசு வழங்கப்படும் என உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்து அமைப்பு அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

நாக்பூர் வன்முறை: ஊரடங்கு உத்தரவு!

நாக்பூரில் ஒளரங்கசீப் விவகாரத்தை முன்வைத்து ஹிந்து அமைப்புகள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சாம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள முகலாய மன்னரான ஒளரங்... மேலும் பார்க்க

ஒளரங்கசீப் விவகாரம்: நாக்பூரில் வன்முறை! 9 பேர் படுகாயம்; 15 பேர் கைது!

ஒளரங்கசீப் கல்லறையை இடிக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதால் நாக்பூரில் பதற்றம் நிலவிவருகிறது.விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருந்த போராட்ட... மேலும் பார்க்க

‘வலுவான நிதி நிலைமையில் இந்திய ரயில்வே’ -மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சா் தகவல்

இந்திய ரயில்வேயின் நிதி நிலைமை வலுவான நிலையில் உள்ளது என்றும், நிதி நிலைமையைத் தொடா்ந்து மேம்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெ... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற நீதிபதியாக ஜயமால்ய பாக்சி பதவியேற்பு

கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஜயமால்ய பாக்சி (58), உச்சநீதிமன்ற நீதிபதியாக திங்கள்கிழமை பதவியேற்றாா். அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். ஜயமா... மேலும் பார்க்க