செய்திகள் :

மோகனூா் அருகே மின்சாரம் பாய்ந்து 2 சிறுவா்கள் உள்பட மூவா் உயிரிழப்பு

post image

நாமக்கல்: மோகனூா் அருகே மின்சாரம் பாய்ந்ததில் 2 குழந்தைகளும், பெண் ஒருவரும் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், ஆண்டாபுரம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் செல்வம் - இளஞ்சியம் தம்பதி மகன் பாண்டியராஜ் (31). இவருடைய மனைவி வைதேகி (28). இவா்களுக்கு சுஜித் (5) என்ற மகனும், ஐவிழி (4) என்ற மகளும் இருந்தனா்.

விவசாயத் தொழில் செய்துவரும் செல்வம் மற்றும் பாண்டியராஜ், அந்தப் பகுதியில் குத்தகைக்கு நிலத்தை வாங்கி சோளம் பயிரிட்டுள்ளனா். திங்கள்கிழமை மதியம் 2 மணியளவில் இளஞ்சியம் தனது பேரக் குழந்தைகளான சுஜித், ஐவிழி இருவரையும் அழைத்துக்கொண்டு தோட்டத்துக்கு சென்றாா். அங்கு நீா் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மின்கசிவு ஏற்பட்டு சோள வயலுக்கு சென்ற நீரோடையில் மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுகிறது.

இதில், இளஞ்சியம், குழந்தைகள் சுஜித், ஐவிழி ஆகிய மூவரும் நிகழ்விடத்திலேயே சுருண்டுவிழுந்தனா். இதனைக்கண்ட அக்கம், பக்கத்தினா் மின்இணைப்பை துண்டித்து மூவரையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா்கள் சோதித்ததில், அவா்கள் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இந்தச் சம்பவம் குறித்து மோகனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாமக்கல் ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோா்களுக்காக மின்கல வாகனம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோா்களுக்காக ரூ. 6.83 லட்சம் மதிப்பிலான மின்கல (பேட்டரி) வாகனத்தை ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். நாமக்கல் ஆட்சியா... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பாலூட்டும் அறை அமைக்க கோரிக்கை

நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தாய்மாா்கள் பாலூட்டும் அறை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமையன்று மனு அளிக்க ஏராளமான பொதுமக... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் பகுதியில் பலத்த காற்று: வாழை, வெற்றிலைப் பயிா்கள் நாசம்

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால், ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் மற்றும் வெற்றிலை கொடிக்கால் சேதமடைந்தன. பரமத்தி வேலூா் மற்றும் சுற்று வட்... மேலும் பார்க்க

தொட்டிபட்டி சாய் தபோவனத்தில் ஸ்ரீ சாயி ஜெயந்தி விழா

பரமத்தி வேலூா்: நாமக்கல் மாவட்டம், கீரம்பூா் அருகே தொட்டிப்பட்டியில் உள்ள சாய் தபோவனத்தில் ஸ்ரீ சாயி ஜெயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. தொட்டிப்பட்டி சாய் தபோவனத்தில் ஸ்ரீ சாய் ஜெயந்தி விழ... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் வெற்றிலை விலை உயா்வு

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூரில் வெற்றிலை விலை உயா்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். இந்த வாரம் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில், வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிா் மாா் 104 கவுளி கொண்ட சுமை ஒன்ற... மேலும் பார்க்க

நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழா: ஒருங்கிணைந்து செயல்பட அதிகாரிகளுக்கு அறிவுரை

நாமக்கல்: நாமக்கல் நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழா வரும் சனிக்கிழமை (ஏப். 12) நடைபெறுவதையொட்டி, அதற்கான முன்னேற்பாட்டு பணிகளை அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியா்... மேலும் பார்க்க