செய்திகள் :

மோசடி அழைப்புகளை தடுக்க விரைவில் சோதனை திட்டம்: டிராய்

post image

பொதுமக்களின் கைப்பேசிகளுக்கு வருகின்ற மோசடி அழைப்புகளை தடுப்பதற்கான சோதனை திட்டத்தை விரைவில் தொடங்கவுள்ளதாக இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.

தற்போது பயனாளா்களின் கைப்பேசிக்கு வருகின்ற வா்த்தக அழைப்புகள் குறித்த தகவல்களை ‘பகிா்ந்தளிக்கப்பட்ட பேரேட்டுப் பதிவு தொழில்நுட்பத்துக்கு’ (டிஸ்டிரிபியுடெட் லெட்ஜா் தொழில்நுட்பம்) மாற்றம் செய்யப்படவுள்ளது என டிராய் தலைவா் அனில் குமாா் லஹோதி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: அமைப்பின் தகவல் தொழில்நுட்ப முறைகளில் மாற்றங்களை மேற்கொள்ள டிராய் முடிவு செய்துள்ளது. இதற்கான ஆலோசனைகளை வழங்கும் பொறுப்பு டெலாய்ட் நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்திடம் இருந்து பெறப்படும் பரிந்துரை அறிக்கையை நிறைவேற்றும் பொறுப்பு வேறொரு அமைப்பிடம் வழங்கப்படும். அதனடிப்படையில் நிகழாண்டு இறுதிக்குள் பல்வேறு சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

தற்போது தங்களுக்கு தெரியாத ஏதேனும் ஒரு நிறுவனத்திடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகளை மோசடி அழைப்புகள் என பொதுமக்கள் புகாா் செய்கின்றனா். ஆனால் அதை அந்நிறுவனம் மறுக்கிறது. புகாரளித்த சம்பந்தப்பட்ட வாடிக்கையாளா் அவரது தகவல்களை பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளாா் என அந்நிறுவனம் கூறுகிறது.

எனவே, பொதுமக்கள் தெரிந்தோ அல்லது தெரியாமலோ அதற்கு அனுமதி வழங்கியது குறித்த தகவல்களை டிஸ்டிரிபியுடெட் லெட்ஜா் தொழில்நுட்பத்துக்கு (டிஎல்டி) மாற்ற முடிவுசெய்துள்ளோம். இதன்மூலம், அனுமதியில்லாமல் பெறப்படுகின்ற தொலைபேசி அழைப்புகளை விரைவில் தடுத்து நிறுத்த முடியும்.

இருப்பினும், வாடிக்கையாளா்கள் ஏற்கெனவே வழங்கிய அனுமதி சாா்ந்த தகவல்கள் மற்றும் அதிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகளை வழங்குவது குறித்த நடைமுறையை உருவாக்குவது மிகவும் சவாலானது.

இதை கண்டறிந்து செயல்படுத்துவதற்கான சோதனை திட்டம் இம்மாதத்தில் தொடங்கப்படவுள்ளது.

இதுதவிர மோசடி அழைப்புகளை கட்டுப்படுத்துவதற்கான புதிய கடுமையான விதிமுறைகளும் இந்த மாதத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்றாா்.

டிஸ்டிரிபியூடெட் லெட்ஜா் தொழில்நுட்பம் என்றால் என்ன?

பல்வேறு பகுதிகள் அல்லது இடங்களில் இணைய தரவுகளை சேகரிப்பது அல்லது பதிவு செய்வதே டிஎல்டி எனப்படுகிறது. பணப் பரிவா்த்தனைகள் உள்பட பல்வேறு தரவுகள் இதில் சேகரிக்கப்படுகின்றன. பொதுவாக ஒரு மையப் பகுதியில் இருந்து கட்டுப்படுத்தப்படும் தரவுகள் கசிவதற்கு அதிக வாய்ப்புள்ள நிலையில், பலதரப்பினராலும் அல்லது குறிப்பிட்ட வலைப்பின்னலுக்குள் மட்டுமே டிஎல்டி கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் தரவுகள் கசிவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது. இது தரவுகளை பாதுகாப்பதற்கான மிகச் சிறந்த தொழில்நுட்பமாக கருதப்படுகிறது.

புதிய 5,000 ரூபாய் நோட்டா? பின்னணியில் இருக்கும் மோசடி என்ன?

சமூக வலைதளங்களில் இந்திய ரிசர்வ் வங்கி புதிதாக ரூ.5,000 நோட்டை வெளியிட திட்டமிட்டிருப்பதாக, பச்சை நிற ரூபாய் நோட்டுடன் வெளியாகும் தகவல்கள் உண்மையல்ல என்று மத்திய அரசு மறுத்துள்ளது.கடந்த ஒரு சில நாள்கள... மேலும் பார்க்க

பெண் உடல் பற்றி கருத்து தெரிவிப்பதும் பாலியல் குற்றமே: கேரள உயர்நீதிமன்றம்

பெண்ணின் உடலமைப்பு குறித்து கருத்து தெரிவிப்பதும் பாலியல் துன்புறுத்தலின்கீழ் வரும் என கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.கேரள மின்சார வாரியத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் பணியில் இருந்தபோது சக பெண் ஊழியரி... மேலும் பார்க்க

பான் அட்டையை புதுப்பிக்க.. என்று வரும் தகவல்களை திறக்க வேண்டாம்!

பான் அட்டையைப் புதுப்பிக்க வேண்டுமா என்று கேட்டு வரும் தகவல்களை திறக்க வேண்டாம், அது மோசடி அழைப்பாக இருக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாட்டில் தற்போது இந்தியா போஸ்ட் பேமேன்ட்ஸ் வங்கியின்... மேலும் பார்க்க

ம.பி. காங்கிரஸில் அதிருப்தியா? மறுப்பு தெரிவித்த கமல்நாத்!

மத்தியப் பிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் கட்சிக்குள் எந்தவித அதிருப்தியும் ஏற்படவில்லை, ஊகங்கள் ஆதாரமற்றவை என முன்னாள் முதல்வர் கமல்நாத் தெரிவித்தார்.கமல்நாத் மற்றும் மாநிலங்களவை எம்பியுமான திகவிஜய் சிங் ... மேலும் பார்க்க

ஆதார் அட்டை எடுத்து 10 ஆண்டுகள் ஆகிறதா? உடனே இதைச் செய்யுங்கள்!!

ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்தவர்கள் உடனடியாக புதுப்பிக்க ஆதார் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.இலவசமாக புதுப்பிக்க டிசம்பர் 31, 2024 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், ஜூன் 14, 2025 வ... மேலும் பார்க்க

26வது திருமண நாளைக் கொண்டாடிவிட்டு தற்கொலை செய்த தம்பதி!

நாக்பூர்: தங்களது 26வது திருமண நாளை வெகு விமரிசையாக, நள்ளிரவு வரை கொண்டாடிய தம்பதி, அதிகாலை தற்கொலை செய்துகொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் பார்க்க