செய்திகள் :

மோடியின் நேர்காணலில் ட்ரம்ப் குறித்த பேச்சு... வீடியோவை பகிர்ந்த ட்ரம்ப்; நன்றி பாராட்டிய மோடி

post image

இந்திய பிரதமர் மோடியிடம் நேர்காணல் செய்த லெக்ஸ் ஃப்ரிட்மேன் பாட்காஸ்டை நிகழ்ச்சியை தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

அந்தப் பாட்காஸ்ட்டில் இந்திய பொருளாதாரம், வறுமை, பாகிஸ்தான், சீனா என பலவற்றை பற்றி பகிர்ந்திருந்த மோடி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவருடனான உறவு குறித்தும் கூறியிருந்தார்.

ட்ரம்ப்பின் கொள்கைகள், அவருடன் பணிபுரிவது, அவரது தலைமை பண்பு பற்றிய பேசிய மோடி, 2019-ம் ஆண்டு அமெரிக்காவில் அவருக்கு நடந்த 'ஹவுடி மோடி' நிகழ்ச்சி குறித்தும் குறிப்பிட்டிருந்தார். அமெரிக்க வெள்ளை மாளிகையை ட்ரம்பே தனக்கு சுற்றி காட்டினார் என்றும், அதைப் பற்றிய வரலாற்றை எந்த குறிப்புகளும் இல்லாமல் கூறினார் என்றும் பாட்காஸ்ட்டில் நினைவு கூர்ந்திருந்தார் மோடி.

ட்ரூத்தில் இணைந்த மோடி!

"சமீபத்தில் அவருடைய உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருந்தாலும், 'தேசம் தான் முதலில்' என்ற அவரின் கொள்கையை வெகுவாக வியக்கிறேன்" என்று ட்ரம்பை பாராட்டியிருந்தார் மோடி.

இந்தப் பாட்காஸ்டை ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் ட்ரம்ப். அதற்காகவே, ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் இணைந்து பிரதமர் மோடி, "நன்றி, எனது தோழரே, அதிபர் ட்ரம்ப். நான் பாட்காஸ்ட்டில் எனது வாழ்க்கை பயணம், இந்தியா, உலக நடப்புகள் என பலவற்றை குறித்து பேசியுள்ளேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.

மோடி ட்ரூத் வலைதளத்தில் இணைந்திருப்பது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் இந்த வலைதளத்தை ட்ரம்ப்பும், அவரின் ஆதரவாளர்களும், அமெரிக்காவில் உள்ள பழமைவாதிகள் தான் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

ஊட்டி கோடை விழா: பழ கண்காட்சி முதல் மலர் கண்காட்சி வரை! எந்தெந்த தேதிகளில் என்னனென்ன நிகழ்ச்சிகள்?

உலக அளவில் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வரும் கோடை வாசஸ்தலமான நீலகிரியில் நடப்பு ஆண்டுக்கான கோடை விழா முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கண்காட்சி நடைபெறும் பூங்காக்கள் அனைத்தையும் புதுப்பொலிவு... மேலும் பார்க்க

காசா மீது இஸ்ரேல் தாக்குதல்; 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு... காற்றில் பறந்த போர் நிறுத்தம்!

கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி, காசா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த... அன்று தொடங்கியது இஸ்ரேல் - காசா போர். பொதுவாக, இஸ்ரேல் தான் தாக்குதலை தொடங்கும். ஆனால், இந்தத் தடவை, வழக்கத்திற்கு மா... மேலும் பார்க்க

``திமுகவுடன் கள்ளக் கூட்டணி'' - நேருக்கு நேராக முட்டிக்கொள்ளும் தவெக vs பாஜக! - என்ன நடக்கிறது?

டாஸ்மாக் விவகாரம் - தவெக குற்றச்சாட்டுதமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறியதை அடுத்து, டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகை போராட்டத்தை அறிவித்து ... மேலும் பார்க்க

ஔவையார்... ஔவை யார்?! - தமிழக சட்டப்பேரவையில் நடந்த சுவாரஸ்ய விவாதம்!

இன்று நடந்து வரும் தமிழ்நாடு சட்டப்பேரவையில், ஔவையார் குறித்த சுவாராஸ்ய உரையாடல் சட்டமன்ற உறுப்பினர் ஒ.எஸ் மணியன், அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, சுவாமிநாதன், சபாநாயகர் அப்பாவுக்கு இடையில் ... மேலும் பார்க்க

``கட்டாய இந்தியை புதைப்போம்" - வைகோ; ``நேரம் முடிந்தது, அமருங்கள்" துணை சபாநாயகர்... பேசியதென்ன?

மதிமுக நிறுவனரும், மாநிலங்களவை எம்.பி-யுமான வைகோ நேற்று தனது நாடாளுமன்ற உரையில், மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி மீது கேள்வியெழுப்பியும், தேசிய கல்விக் கொள்கை இந்தித் திணிப்பை எதிர்த்தும் அனல் பறக... மேலும் பார்க்க