செய்திகள் :

மோடி - ஓபிஎஸ் சந்திப்பு விவகாரம்: "இனியாவது உண்மைய பேசுங்க" - நயினார் நகேந்திரனைத் தாக்கும் ஓபிஎஸ்

post image

முன்னாள் முதலமைச்சரும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியுள்ளது அவரது பயணத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தார் ஓ.பன்னீர்செல்வம். ஆனால், அவருக்கு நேரம் கொடுக்கப்படவில்லை.

ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டதே தனக்குத் தெரியாது என்றார் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன். மேலும் அவர் கேட்டுக்கொண்டால் வரும் 26ம் தேதி பிரதமரிடம் நேரம் வாங்கித் தருவதாகக் கூறினார்.

இந்தச் சூழலில் நயினார் நகேந்திரன் உண்மைக்கு மாறான தகவல்களைக் கூறுவதை நிறுத்த வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

நயினார் நகேந்திரன்
நயினார் நகேந்திரன்

ஓபிஎஸ் அறிக்கை:

"தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் 'தன்னிடம் சொல்லியிருந்தால் மாண்புமிகு பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன்' என்று தெரிவித்துள்ளார். இதில் எள்ளளவும் உண்மை இல்லை. எனவே, இது குறித்த உண்மை நிலையைத் தெரிவிப்பது என் கடமை. திரு. நயினார் நாகேந்திரன் அவர்களை ஆறு முறை கைப்பேசியில் தொடர்புகொள்ள நான் முயன்றேன். ஆனால், திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள் எனது அழைப்பை எடுக்கவில்லை. எனவே, திரு. நயினார் நாகேந்திரன் அவர்களிடம் பேச வேண்டுமென்ற தகவலை குறுஞ்செய்தி மூலம் அவருக்கு அனுப்பியிருந்தேன். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.

அதற்கும் திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள் எந்தவிதப் பதிலும் அளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. இரா. வைத்திலிங்கம் மற்றும் கழக துணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. பி.எச். மனோஜ் பாண்டியன் ஆகியோரை கலந்தாலோசித்த பின்னர், மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களைச் சந்திக்க அனுமதி கேட்டு 24-07-2025 அன்று நான் கடிதம் எழுதினேன். அந்தக் கடிதம் அனைத்து பத்திரிகைகளுக்கும் அனுப்பப்பட்டது.

உண்மையிலேயே, திரு. நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களை நான் சந்திக்க வேண்டுமென்ற விருப்பம் இருக்குமேயானால், நான் கைப்பேசியில் அழைத்த அழைப்பைப் பார்த்தோ அல்லது குறுஞ்செய்தியின் அடிப்படையிலோ என்னிடம் பேசியிருக்கலாம். அல்லது எனது கடிதம் பத்திரிகைகளுக்கு வெளியிடப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு அதற்கான ஏற்பாட்டினைச் செய்திருக்கலாம். ஆனால் எதையும் செய்யவில்லை.

இதிலிருந்து, நான் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களைச் சந்திப்பதில் அவருக்கு விருப்பமில்லை என்பது தெளிவாகிறது. எனவே, மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களைச் சந்திப்பது தொடர்பாக நான் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களிடம் சொல்லவில்லை என்பது சரியல்ல, உண்மைக்குப் புறம்பானது.

திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் என்ற பொறுப்பில் இருக்கிறார். ஆகவே, இனியாவது அவர் உண்மை பேச வேண்டும் என்பதே எனது விருப்பம்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Russia VS America: `Dead Hand; தயார் நிலையில் நீர்மூழ்கி கப்பல்கள்’ - கடலில் யாருக்கு பலம் அதிகம்?

அமெரிக்கா தலைமையிலானா நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரித்த ரஷ்யா, 2022 பிப்ரவரி 24 அன்று 'உக்ரைனுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை' என அறிவித்தது. அது அப்படியே உக்ரைன் ரஷ்யா போராக உருமாறி இ... மேலும் பார்க்க

'லாக் போடும் Modi,தாண்டி அரசியல் செய்யும் EPS,கூட்டணி ட்விஸ்ட்! | Elangovan Explains

ஓபிஎஸ் திமுக பக்கம் நெருக்கம் காட்டுவதால் உச்சகட்ட கோபத்தில் இருக்கும் மோடி.' எடப்பாடி அணுகுமுறையால் தான் இத்தனை சிக்கல்கள்' என செக்கு வைக்கும் அமித்ஷா. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் ஸ்டாலின். ... மேலும் பார்க்க

'இது மோசமான சாதிய சமூகம்’ - Suba Veerapandian Interview | Kavin murder case | Vikatan

நெல்லை கவின் ஆணவக் கொலை தமிழ் சமூகம் என்னவாக மாறியிருக்கிறது என்பது குறித்த கேள்விகளுக்கு விடையளிக்கிறார் திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் மேலும் பார்க்க

'நயினாருக்கு எதிராக ஓபிஎஸ்' டு Coolie இசை வெளியீட்டு விழா; 02.08.2025 முக்கிய செய்திகள்!

'தி கேரளா ஸ்டோரிஸ்' படத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன். ``கேரளாவின் நற்பெயரை கெடுக்கும், வகுப்புவாத வெறுப்பை விதைக்கும் தெளிவான நோக்கத்... மேலும் பார்க்க

Rahul Gandhi: "நான் ராஜா அல்ல; ராஜா என்ற கோட்பாட்டுக்கு எதிரானவன்" - ராகுல் காந்தி ஓபன் டாக்

2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்த பிறகு தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார்.அதன்பின்னர், காங்கிரஸ் எம்.பி-யாகச் செயல்பட்டு வந்த ராகுல் காந்தி தற்போது மக்களவை எதிர்க்கட... மேலும் பார்க்க