செய்திகள் :

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

post image

முதல்வர் ஸ்டாலினை ஓபிஎஸ் சந்திப்பதற்கு முன்பாகவே, நான் அவரை தொடர்புகொண்டேன் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விலகுவதாக அறிவித்த நிலையில், ஓபிஎஸ் என்னிடம் கூறியிருந்தால் பிரதமர் மோடியுடான சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருப்பேன் என்றும் ஓபிஎஸ் கேட்டுக் கொண்டால் வருகிற ஆக. 26 ஆம் தேதி பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு செய்வேன் என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், “’தன்னிடம் சொல்லியிருந்தால் பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன்’ என்று நயினார் கூறுவதில் எள்ளளவும் உண்மை இல்லை.

நயினார் நாகேந்திரனை ஆறு முறை கைபேசியில் தொடர்புகொள்ள நான் முயற்சித்தேன். ஆனால், நயினார் நாகேந்திரன் எனது அழைப்பை எடுக்கவில்லை. எனவே, நயினார் நாகேந்திரனிடம் பேச வெண்டுமென்ற தகவலை குறுஞ்செய்தி மூலம் அவருக்கு அனுப்பியிருந்தேன். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.

பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டு ஜூலை 24 அன்று நான் கடிதம் எழுதினேன். அந்தக் கடிதம் அனைத்து பத்திரிகைகளுக்கும் அனுப்பப்பட்டது. எனது கடிதம் பத்திரிகைகளுக்கு வெளியிடப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு அதற்கான ஏற்பாட்டினை செய்திருக்கலாம். ” என்று அறிக்கை வாயிலாக தெரிவித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய நயினார் நாகேந்திரன், “முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் என்னைப் பற்றி குறை கூறினாலும், நான் அவரைப் பற்றி குறை கூறமாட்டேன்.

முதல்வரை ஓபிஎஸ் சந்திப்பதற்கு முந்தைய நாள்கூட பன்னீர் செல்வத்தை தொடர்புகொண்டு பேசினேன். ஓபிஎஸ் அனுப்பிய கடிதம் எனக்கு இன்னும் வரவில்லை. ஓபிஎஸ் என்னை தொடர்பு கொள்ளவில்லை, நான்தான் அவரை தொடர்புகொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

BJP state president Nainar Nagendran said that he had contacted Chief Minister Stalin even before the OPS met him.

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர... மேலும் பார்க்க

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

சேலம் மாவட்டம் மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு மக்கள் புனித நீராட குவிந்தனர்.சேலம் மாவட்டம் மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அணையின் மட்டம் பகுதியில் மக்கள்... மேலும் பார்க்க

ஆடிப்பெருக்கு தீர்த்தவாரி: கொள்ளிடம் ஆற்றில் எழுந்தருளிய நடராஜர்!

சிதம்பரம்: ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு காவிரி அண்ணையை வழிபடும் வகையில் சிதம்பரத்தை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த திரளான மக்கள், சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையில் ஞாயிற்றுக்கிழமை குவிந்... மேலும் பார்க்க

பாஜக கூட்டணியால் உண்மையான அதிமுக தொண்டர்கள் அதிருப்தி: முதல்வர் ஸ்டாலின்

பாஜக கூட்டணியால் உண்மையான அதிமுக தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நான்காண்டுகால திராவிட மாடல் ஆட்... மேலும் பார்க்க

ஆடிப்பெருக்கு: காவிரி கரையில் திரண்ட மக்கள்!

தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு திருவையாறு காவிரி கரை புஷ்பமண்டப படித்துறையில் மக்கள் திரண்டுள்ளனர்.விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் காவிரித் தாய்க்கு நன்றி... மேலும் பார்க்க

தீரன் சின்னமலை நினைவு நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி(ஆக. 3) அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை திருவுருவச்சிலையின் கீழ் வைக்கப்பட்டுள்... மேலும் பார்க்க