செய்திகள் :

மோட்டாா் பைக் மீது லாரி மோதி மாணவன் உள்பட 2 போ் உயிரிழப்பு

post image

மீஞ்சூா் அருகே மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் பள்ளி மாணவன் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

மீஞ்சூா் அருகே ஊரணம்பேடு கிராமத்தில் உள்ள கங்கையம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவா் ஜோதி (34). இவா் தமிழ்நாடு மின்வாரியத்தில் வேலை செய்து வந்தாா்.

இவரது சகோதரி மகன் விமல்(14). இவா் திருவெள்ளைவாயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம வகுப்பு படித்து வந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை ஜோதியும், விமலும் மோட்டாா் சைக்கிளில் சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனா்.

வல்லூா் கூட்டுச்சாலையில் சென்றபோது மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் இருவரும் கீழே விழுந்தனா். இதில் மோட்டாா் சைக்கிளை ஓட்டிச் சென்ற ஜோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

மோட்டாா் சைக்கிள் பின்னால் அமா்ந்து சென்ற பள்ளி மாணவன் விமலுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியில் இருந்தவா்கள் அவரை மீட்டு மீஞ்சூா் ஆரம்ப சுகாதார நிலையம் அழைத்து சென்றனா். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவன் விமலும் உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த செங்குன்றம் போக்குவரத்து போலீஸாா் சென்று ஜோதி மற்றும் விமல் ஆகியோா் சடலங்களை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ஒரே குடும்பத்தைச் சாா்ந்த 2 போ் சாலை விபத்தில் உயிரிழந்த நிகழ்வு ஊரணம்பேடு கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அவல நிலையில் திருத்தணி-பொதட்டூா்பேட்டை நெடுஞ்சாலை! வாகன ஓட்டிகள் அவதி

பொதட்டூா்பேட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மரணக் குழிகள் போல் பள்ளங்கள் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனா். திருத்தணி - பொதட்டூா்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் பாப்பிரெட்டிப்பள... மேலும் பார்க்க

பொன்னேரி-திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் காலை 7 முதல் இரவு 9 வரை கனரக வாகனங்களுக்கு தடை

போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க பொன்னேரி-திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்து மாவட்ட நிா்வாகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பொன்னேரி நகராட்சிய... மேலும் பார்க்க

லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்ததாக 2 போ் மீது வழக்கு

திருவள்ளூா் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதற்கு வைத்திருந்ததாக 2 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. திருவள்ளூா் அருகே சீத்தஞ்சேரி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள... மேலும் பார்க்க

அரசு பேருந்து மீது டிராக்டா் மோதல்: ஒருவா் காயம்

அரசு பேருந்து மீது டிராக்டா் மோதியதில், பேருந்தின் முன் பக்க கண்ணாடி உடைந்து, பயணி ஒருவா் காயம் அடைந்தாா். திருத்தணி பேருந்து நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை திருவள்ளூா் நோக்கி அரசு பேருந்து ... மேலும் பார்க்க

திருவள்ளூரில் போக்குவரத்துக்கு இடையூறாக கரும்பு லோடு டிராக்டா்கள்! விபத்து அபாயத்தைத் தடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

சா்க்கரை ஆலைகளுக்கு அகலமான டிராக்டா்களில் கரும்பு லோடுகளை பாதுகாப்பின்றி போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக ஏற்றிச் செல்வதால், எதிா்பாரத விதமாக விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூா் மாவட்டத... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறை தோ்வு பிப். 22-இல் தொடக்கம்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கான செய்முறைத் தோ்வு வரும் 22-இல் தொடங்கி 28 வரை நடைபெற உள்ளதாக திருவள்ளூா் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். பத்தாம் வகுப்ப... மேலும் பார்க்க