செய்திகள் :

"யஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்' படத்தின் ரிலீஸ் தாமதமாகுமா?" - தயாரிப்பு நிறுவனத்தின் விளக்கம்!

post image

யஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படமான ‘டாக்ஸிக்’ படக்குழு அறிவித்தபடியே 2026 மார்ச் 19ம் தேதி உலகம் முழுவதும் பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிக்கும் திரைப்படம் 'டாக்ஸிக்'. 'கே.ஜி.எஃப்' படத்திற்குக் கிடைத்த பெரும் வரவேற்பிற்குப் பிறகு யஷ் நடிக்கும் திரைப்படம் என்பதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு எகிறியிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூருவில் பரபரப்பாக நடந்து இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. நீண்ட நாள்களாக படம் குறித்த எந்தத் தகவலும் வெளியாகாததால் சமூக வலைதளங்களில் சமீப நாள்களாக படத்தின் வெளியீடு தாமதமாகும் என வதந்திகள் பரவின.

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 'KVN Productions' தயாரிப்பு நிறுவனம், இன்னும் 140 நாள்களில், அறிவித்தபடியே 2026 மார்ச் 19ம் தேதி யஷ் நடிக்கும் 'டாக்ஸிக்' திரைப்படம் பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

இப்படம் ஆங்கிலம் மற்றும் கன்னடம் ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

Kantara Chapter 1: சவால்களைத் தாண்டி திரைக்கு வந்த `காந்தாரா சாப்டர் 1' உருவான கதை

`காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் கடந்த அக்டோபர் 2- தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது. இயற்கை வளங்கள் நிறைந்த காந்தாராவுக்கும் கடம்ப சாம்ராஜ்யத்திற்கும் இடையான கதையை இந்தப் பாகத்தி... மேலும் பார்க்க

Rishab Shetty: ராமேஸ்வரம் கோவிலில் வழிபட்ட காந்தாரா நடிகர்! | Photo Album

Rishab Shetty in RameswaramRishab Shetty in RameswaramRishab Shetty in RameswaramRishab Shetty in RameswaramRishab Shetty in RameswaramRishab Shetty in RameswaramRishab Shetty in RameswaramRishab Shet... மேலும் பார்க்க

"காசிக்குப் போனால் ராமேஸ்வரத்துக்கு வந்துதானே ஆகணும்" - ராமநாதர் கோவிலில் ரிஷப் ஷெட்டி!

காந்தாரா சாப்டர் 1 படத்தின் வெற்றிக்குப் பிறகு காசிக்குப் பயணம் செய்த ரிஷப் ஷெட்டி, அதைத் தொடர்ந்து ராமேஸ்வரத்துக்கு வருகை தந்துள்ளார். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "... மேலும் பார்க்க

"கரூர் விபத்து; ஒருவரை மட்டும் கைகாட்டி குற்றம் சுமத்த முடியாது" - காந்தாரா இயக்குநர் ரிஷப் ஷெட்டி

கரூரில் தவெக விஜய் பிரசாரத்தின்போது நடந்த கூட்ட நெரிசலால் 41 பேர் பலியான சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்து விசாரிக்க இந்தத் துயர சம்பவம் குறித்து விரிவான அறிக்கையைச் ச... மேலும் பார்க்க

Big Boss 12: பிக் பாஸ் வீட்டுக்கு சீல்; பிக்பாஸுக்கு எதிராக சாட்டையைச் சுழற்றும் கர்நாடகா அரசு

கடந்த சில வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் எனப் பல மொழிகளில் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில், சுற்... மேலும் பார்க்க

காந்தாரா: "எங்கள் உணர்வைப் புண்படுத்தாதீர்கள்" - வேஷம்போடும் ரசிகர்களுக்கு ரிஷப் கோரிக்கை

காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் பார்வையாளர்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கும் சூழலில், திரையரங்குக்கு வரும் ரசிகர்கள் தெய்வத்தைப் (Daiva) போல உடையணிந்து வர வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட... மேலும் பார்க்க