செய்திகள் :

``யார் காலைப் பிடித்து முதலமைச்சர் ஆனாரோ, அவர் காலையே வாரிவிட்டவர்!'' - இபிஎஸ் -க்கு உதயநிதி பதிலடி

post image
கருணாநிதி பெயரில் அவசியமற்ற பணிகள் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்படுகின்றன என எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க., பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். இந்நிலையில் துணை முதலமைச்சரான உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில், "அரசுத்திட்டங்களுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய பெயரை ஏன் வைக்கிறீர்கள் என்று மாண்புமிகு எதிர்க்கட்சித்தலைவர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் கேட்டிருந்தார். அதற்கான பதிலை இன்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் நான் கூறியிருந்தேன். அதிலும் சமாதானம் அடையாத எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள், ஏதேதோ கேள்விகளை மீண்டும் அடுக்கியுள்ளார். குறிப்பாக, மக்கள் பணத்தில் செயல்படுத்தப்படும் திட்டத்துக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெயரை ஏன் சூட்ட வேண்டும் என்கிறார். 94 வயது வரை தமிழ்நாட்டு மக்களுக்காக உழைத்த கலைஞர் அவர்களின், பெயரை அரசுத் திட்டங்களுக்கு சூட்டுவதில் என்ன தவறு இருக்கிறது.

உதயநிதி ஸ்டாலின்

கடந்த காலங்களில், அதிமுக ஆட்சியில், அம்மா உணவகம், அம்மா சிமெண்ட், அம்மா உப்பு என்றெல்லாம் அரசுத்திட்டங்களுக்கு பெயர்களை சூட்டியது யார்? கை ரிக்‌ஷாவை ஒழித்தது முதல் கம்ப்யூட்டர் கல்வியை தந்தது வரை நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய நம் கலைஞர் அவர்களின் பெயரை அரசுத் திட்டங்களுக்குச் சூட்டுவதும், சிலைகள் எழுப்புவதும் கலைஞர் அவர்களுக்கு நாம் செலுத்துகிற நன்றியின் வெளிப்பாடு.

'நன்றி' என்றால் என்னவென்றே தெரியாத எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கு இது புரியாது. யார் காலைப் பிடித்து முதலமைச்சர் ஆனாரோ, அவரின் காலையே வாரிவிட்ட அவர், நன்றி உணர்ச்சி பற்றி தெரியாத காரணத்தால் இப்படியெல்லாம் பேசுகிறார். அவர் வேண்டுமானால், தான் ஊர்ந்து போன டேபிள் - சேருக்கு சிலை வைத்துக் கொள்ளட்டும். நாம் நம்மை ஆளாக்கிய கலைஞர் அவர்களுக்கு சிலை வைப்போம்.

எடப்பாடி பழனிசாமி

அடுத்தது, அப்பா, மகனை பாராட்டுகிறார் ; மகன், அப்பாவை புகழ்கிறார் என்று எதிர்க்கட்சித்தலைவர் அவர்கள் வேதனைப்பட்டுள்ளார். அமைச்சர்கள் நாங்கள் மட்டுமல்ல, நம்முடைய திராவிட மாடல் அரசையும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களையும் இன்றைக்கு உலகமே புகழ்கிறது. போற்றுகிறது. நம் முதலமைச்சர் அவர்கள் என்னை மட்டுமல்ல, எந்தத் துறையின் நிகழ்ச்சியில் பங்கேற்றாலும், அந்தத்துறையின் அமைச்சரின் செயல்பாட்டினை பாராட்டி ஊக்கப்படுத்தி வருகிறார்கள். ‘தன்னை புகழ யாருமே இல்லையே’ என்ற விரக்தியும், ‘தான் பாராட்ட அ.தி.மு.க.வில் ஆளேதும் இல்லையே’ என்ற ஏமாற்றமுமே எதிர்க்கட்சித்தலைவர் அவர்களின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது.

‘நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான்’ என்று என்னை விமர்சனம் செய்திருக்கிறார். ஊர்ந்து போய் பதவி பிடித்த சில கரப்பான் பூச்சிகளுக்கும், விஷ ஜந்துகளுக்கும், என்றைக்கும் நாங்கள் விஷக்காளான்கள் தான். சமூக நீதிக்கொள்கையால் பண்படுத்தப்பட்டு, திராவிட இயக்கத் தலைவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட பயிர்கள் நாங்கள். எங்களைப் பார்த்தால், ஆரியத்தின் அடிவருடிகளுக்கும், அகற்றி வீசப்பட்ட களைகளுக்கும் ஆத்திரம் வருவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

'எதற்கெடுத்தாலும் நான் அனுபவமிக்கவன் - நான் கடந்து வந்த பாதை யாருக்கும் காணக் கிடைக்காது’ என்று தனக்குத்தானே Experience Certificate கொடுத்துக் கொள்ளும் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே, நீங்கள் படித்து முடித்து வீட்டில் பத்திரமாக வைத்துள்ள புத்தகங்களின் பட்டியலை எப்போது சொல்வீர்கள்? நீங்கள் சொன்ன அந்த ‘சேக்கிழ’ ராமாயணத்தை எப்போது தருவீர்கள்? உங்கள் கட்சிப் பெயரில் உள்ள ‘திராவிடம்’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் அறிய அறிஞர்களை கண்டுபிடித்துவிட்டீர்களா? இதற்கெல்லாம் பதில் சொல்லிவிட்டு எங்களை விமர்சிக்க வாருங்கள். உங்கள் வெற்று வார்த்தைகளும், வீண் சவடால்களும் மக்கள் நலனுக்கான எங்கள் பயணத்தை ஒரு போதும் தடுத்திடாது" என்று எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal

`நேற்று AAP அமைச்சர், இன்று பாஜக உறுப்பினர்' - விலகிய கைலாஷ் கெலாட்; கெஜ்ரிவால் ரியாக்சன் என்ன?

நேற்று வரை ஆம் ஆத்மி அமைச்சராக இருந்த கைலாஷ் கெஹ்லோட், இன்று பா.ஜ.க-வில் இணைந்தார்.ஆம் ஆத்மியின் மூத்த தலைவராகவும், டெல்லி அமைச்சராகவும் செயல்பட்டுவந்த கைலாஷ் கெலாட், அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக... மேலும் பார்க்க

`தாராவி குடிசை மேம்பாட்டுத் திட்டம்' மகாராஷ்டிரா தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

மும்பை தாராவி குடிசை மேம்பாட்டுத்திட்டம்மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் இன்றோடு முடிவுக்கு வருகிறது. இத்தேர்தல் பல வளர்ச்சித்திட்டங்களின் எதிர்காலத்தை முடிவு செய்யக்கூடிய ஒன்றாக மாறி இருக்கிறத... மேலும் பார்க்க

Sri lanka: இலங்கையின் புதிய பிரதமராகப் பதிவியேற்ற ஹரிணி அமரசூரிய! - யார் இவர்?

இலங்கையில் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்க புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அவரது தேசிய மக்கள் சக்திக்கு அப்போதைய... மேலும் பார்க்க

மதுரை விமான நிலையத்துக்கு நிலம் கொடுத்த கிராம மக்களின் திடீர் போராட்டத்தால் பரபரப்பு.!

தங்கள் குடியிருப்புகளை காலி செய்யக்கூடாது என்று ஏற்கெனவே முல்லை நகர் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தற்போது சின்ன உடைப்பு கிராம மக்களும் போராட்டத்தை தொடங்கியுள்ளது மதுரையில் பரபரபை ஏற்பட... மேலும் பார்க்க

Seeman: ``இது ஒரு பெரிய குற்றமா?'' - நடிகை கஸ்தூரி கைதுக்கு சீமான் கண்டனம்!

நேற்றிரவு நடிகை கஸ்தூரி ஹைத்ராபாத்தில் கைது செய்யப்பட்டார். சென்னை காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ப... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா தேர்தல்: அஜித்பவாரை தோற்கடிக்க, குடும்பத்தோடு பிரசாரத்தில் இறங்கிய சரத்பவார்..!

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடித்திருக்கிறது. இத்தேர்தல் பிரசாரம் நாளை முடிகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் பம்பரமாக சுழன்று பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் தலைவர்கள் பிரியங்கா காந... மேலும் பார்க்க