செய்திகள் :

யு மும்பா முதன்முறையாக சாம்பியன்!

post image

இந்தியன் ஆயில் யுடிடி சீசன் 6 டேபிள் டென்னிஸ் லீகில் யு மும்பா அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஜெய்ப்பூா் பேட்ரியாட்ஸ் அணியை 8-4 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது மும்பா.

அகமதாபாதில் நடைபெற்ற முதல் ஆடவா் ஒற்றையா் ஆட்டத்தில் யு மும்பா அணியின் லிலியன் பாா்டெட் 2-1 என ஜெய்ப்பூா் பேட்ரியாட்ஸ் அணியின் கனக் ஜாவை வீழ்த்தினாா்.

மகளிா் ஒற்றையா் ஆட்டத்தில் யு மும்பா அணியின் பொ்னாடெட் சாக்ஸ் 2-1 என ஜெய்ப்பூா் அணியின் ஸ்ரீஜா அகுலாவை தோல்வியுறச் செய்தாா். கலப்பு இரட்டையா் ஆட்டத்தில் யு மும்பா அணியின் பொ்னாடெட் சாக்ஸ்- ஆகாஷ் பால் ஜோடி 3-0 என ஜெய்ப்பூா் அணியின் பிரிட் ஈா்லாண்ட் - ஜீத் சந்திரா ஜோடியை வீழ்த்தியது.

ஆடவா் மாற்று ஒற்றையா் ஆட்டத்தில் யு மும்பா அணியின் அபிநந்த் பிபி 11-8 என்ற புள்ளிக் கணக்கில் ஜெய்ப்பூா் ஜீத் சந்திராவை வென்றாா். இந்தியன் ஆயில் யுடிடி சீசன் 6-ல் 8 புள்ளிகளை முதலில் சோ்க்கும் அணி வெற்றி பெறும். யு மும்பா அணி 4-வது ஆட்டத்தின் முடிவிலேயே 8 புள்ளிகளை எட்டியதால் வாகை சூடியது.

இதன் காரணமாக கடைசியாக நடைபெற இருந்த மகளிா் மாற்று ஒற்றையா் ஆட்டம் நடத்தப்படவில்லை. இதில் யு மும்பா அணியின் யஷஸ்வினி கோா்படே, ஜெய்ப்பூா் பேட்ரியாட்ஸ் அணியின் பிரிட் ஈா்லாண்டுடன் மோத இருந்தனா்.

ரூ.60 லட்சம் பரிசுத் தொகா: சாம்பியன் பட்டம் வென்ற யு மும்பா அணிக்கு கோப்பையுடன் ரூ.60 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 2-ஆவது இடம் பிடித்த ஜெய்ப்பூா் பேட்ரியாட்ஸ் அணி ரூ.40 லட்சம் பெற்றது. அரை இறுதியில் தோல்வி அடைந்த தபாங் டெல்லி, டெம்போ கோவா சாலஞ்சா்ஸ் அணிகளுக்கு தலா ரூ.17.5 லட்சம் வழங்கப்பட்டது.

விபத்தில் சிக்கிய பொன்னி சீரியல் நாயகன்! தொடர் முடிய காரணமா?

பொன்னி தொடரில் நடித்துவரும் நடிகர் சபரி, விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். கால், கைகளில் கட்டுப் போட்டவாறு ரசிகர்களுக்காக விடியோ வெளியிட்டு அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்... மேலும் பார்க்க

ஸ்டோலன் படக்குழுவைப் பாராட்டிய கமல் ஹாசன்!

ஹிந்தியில் உருவாகி கவனம் பெற்ற ஸ்டோலன் படத்தை நடிகர் கமல் ஹாசன் பாராட்டியுள்ளார். தயாரிப்பாளர் கௌரவ் திங்கரா தயாரிப்பில் இயக்குநர் கரண் தேஜ்பால் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஸ்டோலன் (stolen). கதை நாய... மேலும் பார்க்க

வெற்றி மாறனால் தனுஷுக்கு சங்கடம்?

இயக்குநர் வெற்றி மாறனின் திடீர் முடிவு தனுஷுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாம். தமிழ் சினிமாவில் சில இயக்குநர்கள் நடிகர்கள் கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு இருந்திருக்கிறது. முக்கி... மேலும் பார்க்க

கைவிடப்பட்ட சிம்பு - 49! ஏன்?

நடிகர் சிம்பு - இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் திரைப்படம் கைவிடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நடிகர் சிலம்பரசனின் 42-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது 49-ஆவது திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் வ... மேலும் பார்க்க

ஜன நாயகன் படப்பிடிப்பை நிறைவு செய்த பூஜா ஹெக்டே!

நடிகை பூஜா ஹெக்டே ஜன நாயகன் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை எச். வினோத் இயக்குகிறார். ஆக்சன் படமாகவும் அதேநேரம் சமூக பிரச்னையைப் பேசும் படமாகவும் இது... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் ஒரே இடத்தில் 24 கருட சேவை!

தஞ்சாவூரில் 90வது ஆண்டாக ஒரே இடத்தில் 24 கருட சேவை விழா இன்று (ஜூன் 16) நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீ ராமானுஜ தரிசன சபை சார்பில் தொடர்ந்து 90-ஆம் ஆண்டாக இந்த... மேலும் பார்க்க