Condemn-க்குப் பதிலாக 'Condom’ என எழுதிய பாகிஸ்தான் பிரதமர்? வைரல் ஸ்கிரீன்ஷாட்டின் பின்னணி என்ன?
ஈரானின் அணு சக்தி நிலையங்கள், கட்டுப்பாட்டு மையம், அணு உலை ஆகியவற்றைக் குறிவைத்துக் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்குப் பதில் தாக்குதல்களை ஈரான் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதலில் 224 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஈரான் சுகாதாரத்துறை ஜூன் 15ஆம் தேதி அறிக்கை வெளியிட்டது.
இந்த நிலையில் இஸ்ரேல் – ஈரான் மோதல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பதிவிட்டதாக ஒரு ஸ்கிரீன்ஷாட் வைரலாகி வருகிறது.

அதன்படி “I condemn” (நான் கண்டிக்கிறேன்) என்பதற்குப் பதிலாக “I condom” (நான் காண்டம்) என்று தவறுதலாக டைப் செய்ததாக ஒரு ஸ்கிரீன்ஷாட் சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி வருகிறது.
இந்தப் பதிவு இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டிக்கும் நோக்கில் எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது.
X தளத்தில் பரவிய அந்த ஸ்கிரீன்ஷாட்டில், “I condom the attack on Iran by Israel…” என்ற வாக்கியம் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. இந்தப் பதிவு பெரும் பேசுபொருளாக மாற்றியுள்ளது.
'I Condom'
— Space Recorder (@1spacerecorder) June 13, 2025
Pakistan's Prime Minister mistakenly wrote 'condom' instead of 'condemn' in the support of Iran.
Later, he rectified it. pic.twitter.com/5DGiv9qZql
இந்தப் பதிவின் உண்மைத்தன்மை முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை. வைரலாகி வரும் ஸ்கிரீன்ஷாட்டை தவிர, அதன் இருப்பை உறுதிப்படுத்தும் விதமாக எந்த நம்பகமான ஆதாரமும் இல்லை.
பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளில் ஈரானுக்கு முழு ஆதரவுடன் “condemn” என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்கிரீன்ஷாட் வைரலானதையடுத்து, ஒரு பயனர் AIயிடம் நீக்கப்பட்ட அந்த ட்வீட்டைத் தரும்படி கேட்டபோது, அது நீக்கப்பட்ட பதிவை மீட்டெடுக்க முடியாது என்று கூறியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.