செய்திகள் :

ரஞ்சி கோப்பையை வெல்லப் போவது யார்? டாஸ் வென்ற கேரளம் பந்துவீச்சு!

post image

ரஞ்சி கோப்பையின் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற கேரளம் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் விதர்பாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கேரள கேப்டன் சச்சின் பேபி முதலில் பந்து வீசுவதாகத் தெரிவித்துள்ளார்.

ரஞ்சி வரலாற்றில் கேரள அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. விதர்பா அணி இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. மேலும், விதர்பா அணி இந்த சீசனில் ஒரு தோல்விகூட இல்லாமல் விளையாடி வருகிறது.

கேரள அணி: அக்‌ஷய் சந்திரன், ரோஹன் குன்னும்மல், வருண் நாயனார், சச்சின் பேபி (கேப்டன்), ஜலஜ் சக்சேனா, முகமது அசாருதீன், அகமது இம்ரான், சல்மான் நிஜார், ஆதித்யா சர்வதே, எம்.டி. நிதிஷ், நெடுமன்குழி பாசில்.

விதர்பா அணி: துருவ் ஷோரே, பார்த் ரேகாடே, டேனிஷ் மாலேவார், கருண் நாயர், யாஷ் ரத்தோட், அக்‌ஷய் வட்கர் (கேப்டன்), ஹர்ஷ் துபே, நாச்சிகேத் பூடே, தர்ஷன் நல்கண்டே, யாஷ் தாக்கூர், அக்ஷய் கர்னேவர்.

ஒரே போட்டியில் பல சாதனைகளை நிகழ்த்திய இப்ரஹிம் ஸத்ரான்!

இப்ரஹிம் ஸத்ரான் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிகபட்ச ரன்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் ரன்கள் 325... மேலும் பார்க்க

ஆப்கன் அதிரடி பேட்டிங்..! இங்கிலாந்துக்கு 326 ரன்கள் இலக்கு!

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் ரன்கள் எடுத்தது.அதிரடியாக விளையாடிய இப்ரஹிம் ஸத்ரான் 177 ரன்கள் அடித்து அசத்தினார். இங்கிலாந்து சார்பில் ... மேலும் பார்க்க

சென்னையில் தோனி! இதுதான் கடைசி ஐபிஎல்? தோனி சூசகம்!

சென்னை : ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ்(சிஎஸ்கே) அணியின் மூத்த வீரர் மகேந்திர சிங் தோனி இன்று(பிப். 26) சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய தோனி, வழக்கம... மேலும் பார்க்க

வரலாறு படைத்த ஆப்கன் வீரர்..!

சாம்பியன்ஸ் டிராபியில் ஆப்கானிஸ்தான் தொடக்க வீரர் இப்ராஹிம் ஸத்ரான் சதமடித்து அசத்தியுள்ளார். குரூப் பி பிரிவில் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 8-வது போட்டியில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்... மேலும் பார்க்க

ஒருநாள் தரவரிசை: விராட் கோலி முன்னேற்றம்! முதலிடத்தில் கில்!

ஐசிசி ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி முன்னேற்றம் பெற்றுள்ளார்.சர்வதேச கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல் வாரந்தோறும் புதன்கிழமை வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தவாரத்த... மேலும் பார்க்க

வாழ்வா? சாவா? போட்டியில் இங்கிலாந்து - ஆப்கன்! அரையிறுதி வாய்ப்பு யாருக்கு?

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 8-வது போட்டியில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் மோதும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானின் கராச்சி, ராவல்பிண்டி, ல... மேலும் பார்க்க