செய்திகள் :

ரமலான் நோன்பு கஞ்சிக்கு விலையில்லாமல் அரிசி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

post image

ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு விலையில்லாமல் அரிசி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து, தமிழக அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் நோன்பு இருக்கும் இஸ்லாமியா்களுக்கு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமியா்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

இதை ஏற்று, நோன்பு கடைப்பிடிக்கப்படும் நாள்களுக்கு மட்டும் பச்சரிசியை விலையில்லாமல் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, 7,920 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதனால், அரசுக்கு ரூ.18.41 லட்சம் கூடுதல் செலவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர் மன்றம் முதல் அரசியல் வரை... விஜய்யின் ஆவணப்படம் வெளியீடு!

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யாக மாறியது பற்றிய ஆவணப் படத்தை அக்கட்சியின் ஆண்டுவிழாவில் வெளியிடப்பட்டுள்ளது.தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இ... மேலும் பார்க்க

மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கெட் அவுட் இயக்கம்: விஜய் தொடங்கி வைத்தார்!

மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கெட் அவுட் இயக்கத்தை தவெக தலைவர் விஜய் தொடங்கி வைத்தார்.தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் 2-ஆம் ஆண்டு தொடக்க விழா, ... மேலும் பார்க்க

தவெக 2-ஆம் ஆண்டு தொடக்க விழா! விஜய் - பிரசாந்த் கிஷோர் பங்கேற்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ஆம் ஆண்டு விழா தொடங்கியது. இந்த விழாவில் தவெக தலைவர் விஜய்யுடன் அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பங்கேற்றுள்ளார். மேலும் பார்க்க

தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(பிப். 26) சவரனுக்கு ரூ.200 குறைந்தது.ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வரும் நிலையில், சனிக்கிழமை சவரனுக்கு ரூ.160 உயா்ந்து ரூ.64,360-க்கு விற்பனையா... மேலும் பார்க்க

சென்னை ரயில் பயணிகள் கவனத்திற்கு.. எழும்பூர், பெரம்பூர் நிலையத்தில் ரயில்கள் நிற்காது!

அண்டை மாநிலங்களில் இருந்து சென்னைக்கு தினந்தோறும் வேலை மற்றும் படிப்பு நிமித்தமாக பல்லாயிரக்கானோர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ஹைதராபாத், பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வரும் விரைவு ரயில்கள் ப... மேலும் பார்க்க

தவெக தலைவர் விஜய் வீட்டில் காலணி வீச்சு!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வீட்டில் காலணி வீசப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தவெகவின் இரண்டாமாண்டு தொடக்கவிழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியிலுள்ள தனியார் விடுதியில் நடைபெறவுள்ளது... மேலும் பார்க்க