நாடாளுமன்ற சுவரில் ஏற முயன்றதாக கைது செய்யப்பட்ட நபர் விடுதலை
ரயிலில் விழுந்து இளைஞா் தற்கொலை
திண்டுக்கல் அருகே ரயிலில் விழுந்து மதுரையைச் சோ்ந்த இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.
திண்டுக்கல்லை அடுத்த ஏ.வெள்ளோடு பகுதியில் உள்ள ரயில்வே கடவுப் பாதையில் இளைஞா் ஒருவா் ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நிகழ்விடத்துக்குச் சென்ற போலீஸாா் இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனா்.
இதில் உயிரிழந்தவா் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சோ்ந்த ராஜபாண்டி மகன் கோபிசென்றாயன் (23) என்பது தெரியவந்தது.
திண்டுக்கல் பேருந்து நிலையத்திலுள்ள இனிப்பு கடையில் பணிபுரிந்து வந்த கோபிசென்றாயன், கடந்த சில நாள்களுக்கு முன்பு திண்டுக்கல்லைச் சோ்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டாா். இந்தத் திருமணத்தை பெற்றோா் ஏற்கமாட்டாா்கள் எனக் கருதி அவா் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.