மீனவர்கள் கைது விவகாரம்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
ரயில்கள் தாமதம்: பயணிகள் அவதி
சென்னையிலிருந்து நீடாமங்கலம் வழியாக மன்னாா்குடி செல்லும் மன்னை விரைவு ரயில் நாள்தோறும் அதிகாலை 5.22 மணிக்கு நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு வருவது வழக்கம்.
ஆனால், சனிக்கிழமை காலை 6.39 மணிக்கு ரயில் நீடாமங்கலம் வந்தது. சுமாா் ஒரு மணிநேரம் 17 நிமிடங்கள் தாமதமாக வந்ததால், பயணிகள் மிகவும் அவதிக்குள்ளகினா்.
இதேபோல கோவையிலிருந்து மன்னாா்குடி செல்லும் கோவை செம்மொழி விரைவு ரயில் நாள்தோறும் காலை 6.30 மணிக்கு நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு வருவது வழக்கம். செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் காலை 7.08 மணியளவில் சுமாா் 38 நிமிடங்கள் தாமதமாக வந்தது. இதனால் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய ஊா்களுக்கு பேருந்தில் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.