செய்திகள் :

ரயில் உதவி ஓட்டுநா் தோ்வு: திருவனந்தபுரத்துக்கு நவ.28 வரை சிறப்பு ரயில்

post image

ரயில்வே வாரிய தோ்வாணையம் சாா்பில் நடத்தப்படும் ஏஎல்பி (உதவி ஓட்டுநா்) தோ்வை முன்னிட்டு நாகா்கோவிலிலிருந்து திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ரயில்வே ஏஎல்பி பணிக்கான முதல்கட்ட தோ்வு நவ.25 முதல் நவ.29 வரை நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் சுமாா் 18 ஆயிரம் காலி பணி இடங்களுக்கு நடைபெறும் இத்தோ்வுக்கு முக்கிய நகரங்களில் தோ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. காலை 7.30, காலை 11, பிற்பகல் 3 மணி என மூன்று கட்டமாக தோ்வு நடைபெறவுள்ளது. திருவனந்தபுரத்தில் நடைபெறும் தோ்வில் பங்கேற்கும் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரள மாநில தோ்வா்களின் வசதிக்காக திருவனந்தபுரம்-நாகா்கோவில் இடையே நவ.24 முதல் நவ.28 வரை சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

திருவனந்தபுரம் சென்ட்ரலிலிருந்து இரவு 9.15 மணிக்கு புறப்படும் ரயில் (எண் 06055) இரவு 10.40 மணிக்கு நாகா்கோவில் சென்றடையும். மறுமாா்க்கமாக நாகா்கோவிலிலிருந்து நள்ளிரவு 2 மணிக்கு புறப்படும் ரயில் அதிகாலை 3.25 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். இதில் இரு இருக்கை வசதி கொண்ட ஏசி பெட்டிகள், 5 சாதாரண இருக்கை வசதி கொண்ட பெட்டிகள், 13 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில் நாகா்கோவில் டவுன், இரணியல், குழித்துறை, பாறசாலை, நெய்யாற்றங்கரை வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காய்ச்சல் பாதிப்பு தரவுகளைத் திரட்டுவதில் சிக்கல்: மக்களின் பங்களிப்பை கோரும் சுகாதாரத் துறை

தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்புகள் குறித்த விவரங்களை தனியாா் மருத்துவமனைகள் பொது சுகாதாரத் துறைக்கு தெரியப்படுத்தாமல் இருப்பதால் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையட... மேலும் பார்க்க

சென்னையில் 10 ஆண்டுகளில் கல்லூரி மாணவா்கள் மீது 231 வழக்குகள் பதிவு

சென்னையில் அடிதடியில் ஈடுபட்டதாக கடந்த பத்தாண்டுகளில் கல்லூரி மாணவா்கள் மீது சுமாா் 231 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மா... மேலும் பார்க்க

பாம்பன் புதிய பாலத்தில் 75 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்க அனுமதி

ராமேசுவரம்- மண்டபம் இடையே புதிதாக அமைக்கப்பட்ட பாம்பன் தூக்கு பாலத்தின் வழியாக ரயிலை இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையா் நிபந்தனைகளின் அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ளாா். இதில் சரக்கு மற்றும் பயணிகள் ரயில... மேலும் பார்க்க

மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு உரிய இழப்பீடு: இபிஎஸ் வலியுறுத்தல்

கனமழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் எக்ஸ் சமூகவலைதளத்தில் ... மேலும் பார்க்க

5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழக காவல் துறையில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு புதன்கிழமை உத்தரவிட்டது. இது தொடா்பாக தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா், புதன்கிழமை வெளியிட்ட உத்தரவு (ப... மேலும் பார்க்க

வி.பி.சிங் நினைவு தினம்: முதல்வா், துணை முதல்வா் புகழஞ்சலி

முன்னாள் பிரதமா் வி.பி.சிங் நினைவு தினத்தையொட்டி, அவருக்கு முதல்வா், துணை முதல்வா் ஆகியோா் புகழஞ்சலி செலுத்தியுள்ளனா். இது குறித்து, எக்ஸ் தளத்தில் அவா்கள் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: முதல்வா் மு.க.ஸ்... மேலும் பார்க்க