செய்திகள் :

ரயில் நிலையங்களில் ரீல்ஸ் எடுக்க வேண்டாம்.. எடுத்தால்! ரயில்வே எச்சரிக்கை

post image

ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில், அல்லது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், பலரும் ரீல்ஸ் எடுப்பது அதிகரித்திருக்கும் நிலையில், ரயில்வே அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதாவது, பொது வெளியில், ஆடிப் பாடி விடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு லைக்குகளை அள்ள வேண்டும் என்பதற்காக இளைஞர்கள் பலரும் ஆபத்தான செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

அதிலும், மக்கள் அதிகம் கூடும் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கோயில் போன்ற இடங்களில் ரீல்ஸ் எடுத்து பதிவிடுவது அதிகரித்துள்ளது.

சிலர், அதனையும் தாண்டி, ரயில் பெட்டிகள் மீது ஏறுவது, தண்டவாளத்தில் படுத்துக் கொண்டு விடியோ எடுப்பது, ரயில் வரும் வழியில், ரயிலைத் தொடும் தொலைவில் நின்றுகொண்டு விடியோ எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு, சில வேளைகளில் உயிர் பலிகளும் நேரிடுகின்றன.

இந்த நிலையில், ரயில் நிலையங்களில் ரீல்ஸ் எடுத்து பதிவிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

வழக்கமாக, ரயில்நிலையங்களில் விடியோ எடுக்க அனுமதியில்லை. புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் தற்போது ஏராளமானோர் ரீல்ஸ் எடுத்துப் பதவிட்டு வருவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் பயணிகளைக் கண்காணிக்கவும், ரீல்ஸ் எடுத்தால் அபராதமும், பயணிகளை அச்சுறுத்தும் வகையில் அல்லது உயிருக்கு ஆபத்தான வகையில் ரீல்ஸ் எடுத்தால் கைது நடவடிக்கையும் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை தீவிரமாகக் கடைபிடிக்கப்படும் என்றும் தண்டவாளப் பகுதிகளிலும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகள் அறிவுறுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

Railways warns against taking reels at railway stations, fines or arrests if taken

சிக்கலில் சின்னசாமி மைதானம்! ஆர்சிபி கூட்ட நெரிசல் பலி விவகாரம்!

பெங்களூருவின் எம்.சின்னசாமி மைதானம் பெரியளவிலான நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பானது அல்ல என்று விசாரணைக் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் 11 பேர் பரிதாபமாக பலியான ந... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்குத் தெளிவான செய்தியை அனுப்பிய ஆபரேஷன் சிந்தூர்: உபேந்திர திவேதி

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது நடத்தப்பட்ட தாக்குதல்கள் பயங்கரவாத ஆதரவாளர்கள் தப்பிக்க இயலாது என்பதற்கான தெளிவான செய்தியை பாகிஸ்தானுக்கு அளித்ததாக இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி கூறிய... மேலும் பார்க்க

உலகளவில் பெரும் மதிப்புடைய தலைவர்கள்! பிரதமர் மோடி முதலிடம்!

உலகின் அதி நம்பிக்கையான தலைவர்கள் குறித்த பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.உலகளவில் அதி நம்பிக்கையான மற்றும் பெரும் மதிப்புடைய தலைவர்களின் பட்டியல் குறித்து ஆய்வு மேற்கொ... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் 3 நக்சல்கள் சுட்டுக் கொலை!

ஜார்க்கண்டின் கும்லா மாவட்டத்தில் சனிக்கிழமை காலை பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் மூன்று நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.சிபிஐ (மாவோயிஸ்ட்)-ல் இருந்து பிரிந்த குழுவ... மேலும் பார்க்க

இந்தியாவில் நீரில் மூழ்கி பலியாகும் குழந்தைகள்! உலகளவில் 18% பெற்ற அவலம்!

நீரில் மூழ்கி உயிரிழப்பவர்களின் உலகளாவிய எண்ணிக்கையில் இந்தியாவில் 18 சதவிகித அளவில் ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.நீரில் மூழ்கி இறப்பவர்கள் குறித்து தன்னார்வத் தொண்டு நிறுவனம் சமீபத்த... மேலும் பார்க்க

கேரள பாலியல் வன்கொடுமை, கொலைக் குற்றவாளி தப்பியது எப்படி? அதிர்ச்சியில் சிறைத்துறை

கேரள மாநிலத்தில், கடந்த 2011ஆம் ஆண்டு, ஓடும் ரயிலிலிருந்து பெண்ணை வெளியே தள்ளி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி, கன்னூர் சிறையிலிருந்து தப்பிச் சென்றது எப்படி என்று தெரிய... மேலும் பார்க்க