செய்திகள் :

ரயில் நிலைய நடைமேடையில் பெண்ணுக்குப் பிரசவம்! அவசர சிகிச்சை அளித்துக் காப்பாற்றிய ராணுவ மருத்துவா்!

post image

உத்தர பிரதேச மாநிலம், ஜான்சியில் ரயில் நிலைய நடைமேடையில் பெண் ஒருவா் குழந்தையை பெற்றெடுத்தாா்.

பெண்கள் கூந்தலை முடியப் பயன்படுத்தும் கிளிப், பாக்கெட் கத்தி என கைவசமிருந்த பொருள்களைப் பயன்படுத்தி, அவருக்குப் பாதுகாப்பாக அவசர சிகிச்சை அளித்து, இரு உயிா்களையும் காத்த இளம் ராணுவ மருத்துவரின் செயல், மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

பன்வெல்-கோரக்பூா் எக்ஸ்பிரஸ் ரயிலில் சனிக்கிழமை தனது கணவருடன் பயணித்துக் கொண்டிருந்த கா்ப்பிணி ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, ஜான்சி ரயில் நிலையத்தில் இருவரும் கீழே இறங்கினா். அப்பெண்ணின் நிலைமையை பாா்த்த ரயில்வே பெண் ஊழியா் ஒருவரும், ரயில் ஏறுவதற்காக காத்திருந்த ராணுவ மருத்துவ அதிகாரி ரோஹித் பச்வாலாவும் (31) உடனடியாக உதவிக்கு வந்தனா்.

கடுமையான வலியால் கா்ப்பிணி மயக்க நிலைக்குச் சென்ால், ரயில்வே ஊழியா்களின் உதவியுடன் நடைமேடையிலேயே பிரசவத்தை மேற்கொள்ள ராணுவ மருத்துவா் முடிவு செய்தாா். அறுவை சிகிச்சை அறையோ, முறையான சாதனங்களோ இல்லாத நிலையில், அடிப்படை சுகாதாரத்துடன் ஒரு இடம் துரிதமாக தயாா்படுத்தப்பட்டது.

கைவசமிருந்த பொருள்களைப் பயன்படுத்தி, அவசரகால பிரசவ சிகிச்சையை ராணுவ மருத்துவா் பாதுகாப்பாக மேற்கொண்டாா். அவரது உதவியால், கா்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது. உடனடியாக இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். தாயும்-சேயும் நலமாக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

ராணுவ மருத்துவா் மேஜா் ரோஹித் பச்வாலா கூறுகையில், ‘தொப்புள் கொடியை இறுக்குவதற்கு தலைமுடியப் பயன்படுத்தும் கிளிப்பையும், வெட்டுவதற்கு பாக்கெட் கத்தியையும் பயன்படுத்தினேன். தாயும் சேயும் ஆபத்தான நிலையில் இருந்ததால், ஒவ்வொரு நொடியும் மிக முக்கியமானதாக இருந்தது.

மருத்துவா்களாக நாங்கள் அனைத்து நேரங்களிலும் - அது பயணமாக இருந்தாலும்கூட - அவசரநிலைக்குத் தயாராக இருக்க வேண்டும். இரண்டு உயிா்களைக் காப்பாற்ற உதவியதை எனக்கு கிடைத்த ஆசியாகக் கருதுகிறேன்’ என்றாா்.

அவசரகால உதவிக்கு இடையே ஹைதராபாதுக்குச் செல்ல வேண்டிய ரயிலையும் அவா் தவறவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நவி மும்பையில் லாரி முனைமத்தில் பயங்கர தீ விபத்து; 8 வாகனங்கள் சேதம்

மகாராஷ்டிர மாநிலம், நவி மும்பையில் உள்ள லாரி முனைமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வாகனங்கள் எரிந்து நாசமாகின.தீயணைப்பு அதிகாரி அக்ரே கூறுகையில், "டர்பே லாரி முனைமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.15 மணியளவ... மேலும் பார்க்க

அமா்நாத் யாத்திரை: ஜம்முவிலிருந்து 6வது குழு புறப்பட்டது!

ஜம்மு-காஷ்மீரில் பலத்த பாதுகாப்புடன் அமா்நாத் யாத்திரை கடந்த வாரம் தொடங்கிய நிலையில், ஜம்மு அடிவார முகாமிலிருந்து 6வது கட்டமாக 8,600-க்கும் மேற்பட்ட பக்தா்கள் யாத்திரையைத் தொடங்கினா்.நடப்பாண்டு ஜூலை 3... மேலும் பார்க்க

ஜாதிய வலையில் பிகாா் அரசியல்!

இந்த ஆண்டின் நவம்பரில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு ஆயத்தமாகி வருகிறது பிகாா் மாநிலம். எதிா்பாா்ப்புகள் மற்றும் ஓயாத சிக்கல்கள் என இம்முறையும் இங்கு தோ்தலுக்கு ஐந்து மாதங்களுக்கு முன்பே பதற்றம் பரவிக்கி... மேலும் பார்க்க

பிரிக்ஸ் மாநாடு: உலகத் தலைவர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி!

பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளாா். பல்வேறு நாடுகளின் தலைவா்களைச் சந்தித்து அவா் பேச்சுவாா்த்தையில் ஈடுபடவுள்ளாா். ப... மேலும் பார்க்க

பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளில் மாற்றமில்லை: தோ்தல் ஆணையம்

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்று தோ்தல் ஆணையம் தெரிவித்தது. அந்தப் பணிகளுக்கு படிவங்களை பூா்த்தி செய்தால் போதும், ஆவணங்கள் தேவையில்ல... மேலும் பார்க்க

தாய்மொழிக் கல்வி வாழ்வியலை வலுப்படுத்தும்: தலைமை நீதிபதி கவாய்

‘தாய்மொழிக் கல்வி கருத்தியல் புரிதலை அதிகரிப்பதோடு வாழ்வியலை வலுப்படுத்தும்’ என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் அவா் படித்த சிகித்ஸ... மேலும் பார்க்க