kanguva: "என்னையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள்" -'கங்குவா' குறித்து விஜய்...
ரஷியாவுக்கு செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை!
அடுத்தாண்டு முதல் விசா இல்லாமல் இந்தியர்கள் பயணம் செய்ய ரஷியா அனுமதிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, கடந்த ஜூன் மாதம் விசா இல்லாத சுற்றுலா பரிமாற்றங்களை செயல்படுத்துவது குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் ஒப்பந்தம் கொண்டுவருவது பற்றி விவாதித்தனர்.
இதையும் படிக்க : உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழகத்துக்கு ஆரஞ்சு அலர்ட்!
ஆகஸ்ட் 2023 முதல் இந்தியர்களை இ-விசாக்கள் மூலம் ரஷியா அனுமதித்து வருகின்றது. இந்த இ-விசாக்கள் விண்ணப்பித்து 4 நாள்களுக்குள் வழங்கப்படுகிறது. இந்தியா உள்பட 5 நாடுகளுக்கு இ-விசா மூலம் பயணம் செய்ய ரஷியா அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் இ-விசா மூலம் 9,500 இந்தியர்கள் ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
ரஷியாவுக்குள் நுழைவதற்கும், தங்குவதற்கும் அந்நாட்டின் தூதரகத்தில் இந்தியர்கள் விசா பெறும் நடைமுறை தற்போது அமலில் உள்ளது. இந்த செயல்முறை மிக நீண்டதாகும்.
பெரும்பாலான இந்தியர்கள் வணிகம் மற்றும் அலுவல் நோக்கத்துக்காக ரஷியாவுக்கு பயணம் செய்கிறார்கள். 2023ஆம் ஆண்டில் மட்டும் 60,000 பேர் பயணித்துள்ளனர். அதற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 26 சதவிகிதம் அதிகமாகும்.
தற்போது சீனா மற்றும் ஈரான் நாட்டினரை விசா இல்லாமல் நாட்டுக்குள் நுழைய ரஷியா அனுமதித்து வருகின்றது. இந்த திட்டம் வெற்றி அடைந்துள்ளதை தொடர்ந்து, இந்தியாவுக்கும் விரிவுப்படுத்த முன்வந்துள்ளது ரஷியா.