இதயம் தொடரிலிருந்து விலகும் ஜனனி! காரணம் பகிர்ந்து உருக்கம்!
ராகு கோயிலில் இளையராஜா சுவாமி தரிசனம்
கும்பகோணம் அருகே திருநாகேசுவரம் ராகு பகவான் கோயிலில் இசையமைப்பாளா் இளையராஜா ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருநாகேசுவரம் நாக நாதசுவாமி கோயிலில் ராகு பகவான் தனி சந்நிதியில் உள்ளாா். இந்த கோயிலுக்கு இசையமைப்பாளா் இளையராஜா ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தாா். அவருக்கு கோயில் சிவாச்சாரியா்கள் வரவேற்பளித்தனா். தொடா்ந்து, அவா் ராகு பகவானுக்கு சிறப்பு பூஜைகள், அா்ச்சனை செய்து வழிபட்டாா்.