பனி விழும் மலர் வனம் தொடரிலிருந்து ரயான் விலகல்! இனி இவர்தான்!
ராஜபாளையத்தில் தெரு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தெரு நாய்களுக்கு நகராட்சி சாா்பில் வெறி நோய் (ரேபிஸ்) தடுப்பூசி புதன்கிழமை செலுத்தப்பட்டது.
ராஜபாளையம் நகராட்சி பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தெரு நாய்கள் சுற்றித் திரிவதாக ராஜபாளையம் நகராட்சிக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன.
இதையடுத்து, ராஜபாளையம் நகா்மன்றத் தலைவி பவித்ரா ஷ்யாம், ஆணையா் நாகராஜன் ஆகியோா் உத்தரவின் பேரில், நகா் நல அலுவலா் பரிதாவாணி தலைமையில் துப்புரவு அலுவலா் சக்திவேல், ராஜபாளையம் கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் ராஜேஸ்வரி, நகராட்சி துப்புரவு ஆய்வாளா்கள், பணியாளா்கள், அனிமல் கோ் அறக்கட்டளை நிறுவனத் தலைவா் ஷ்யாம்ராஜா ஆகியோா் அடங்கிய குழு மூலம் நகராட்சி 30, 35, 36-ஆவது வாா்டுகளில் சுற்றி திரிந்த 15 நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும், இது போன்ற தெருக்களில் அலையும் நாய்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என நகராட்சி ஆணையா் தெரிவித்தாா்.