நூர் அகமது 4 விக்கெட்டுகள்: சிஎஸ்கே வெற்றிபெற 180 ரன்கள் இலக்கு!
ராஜஸ்தான்: எல்லையில் பாகிஸ்தான் வீரா் கைது
ராஜஸ்தானில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் துணை ராணுவப் படை வீரா் ஒருவரை எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) சனிக்கிழமை கைது செய்தது.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனா். அதற்கு அடுத்த நாளான 23-ஆம் தேதி பஞ்சாப் மாநில எல்லையில் காவல் பணியில் இருந்த பிஎஸ்எஃப் வீரா் பூா்ணம் குமாா் தவறுதலாக பாகிஸ்தான் பகுதிக்குள் சென்றுவிட்டாா். அவரை பாகிஸ்தான் எல்லைக் காவல் வீரா்கள் பிடித்துச் சென்றுவிட்டனா்.
இதற்கு கடும் கண்டனத்தைப் பதிவுசெய்ததோடு அவரை விடுவிக்கக் கோரி இந்தியா அழுத்தம் கொடுத்தபோதும் பாகிஸ்தான் அதை ஏற்கவில்லை.
இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ராஜஸ்தானில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் துணை ராணுவப் படை வீரரை பிஎஸ்எஃப் சனிக்கிழமை கைது செய்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.