ராமா் கல்யாணத்துக்கு ஏழுமலையான் லட்டு
ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், ஒண்டிமிட்டாவில் நடைபெறும் ஸ்ரீ சீதா - ராமா் திருமணத்துக்கு வரும் பக்தா்களுக்கு வழங்க ஏழுமலையான் லட்டு பிரசாதங்கள் தயாராக உள்ளன.
திருமலையில் உள்ள ஸ்ரீவாரி சேவா சதன் 2-இல் ஸ்ரீவாரி சேவகா்களின் உதவியுடன் லட்டு பேக்கிங் புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டது. துணை செயல் அதிகாா்ஜ் (பொது) சிவபிரசாத் மற்றும் பாலராஜு தலைமையில், கிட்டத்தட்ட 300 ஆண் மற்றும் பெண் ஸ்ரீவாரி சேவகா்கள் 70,000 லட்டுகளை பேக் செய்தனா்.
கடப்பா மாவட்டம், ஒண்டிமிட்டாவில் நடைபெற்று வரும் ஸ்ரீ கோதண்டராம சுவாமி பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக, ஏப்ரல் 11 -ஆம் தேதி மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும் ஸ்ரீ சீதா - ராமா் திருக்கல்யாண பிரம்மாண்டமான விழாவில் பங்கேற்கும் பக்தா்களுக்கு இந்த லட்டுகள் பிரசாதமாக விநியோகிக்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவாரி சேவா ஊழியா்கள் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.