செய்திகள் :

நெல்லை இருட்டுக்கடை உரிமையைக் கேட்டு துன்புறுத்திய கணவர்: உரிமையாளர் மகள் வரதட்சணைப் புகார்

post image

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் இயங்கி வரும் மிகப் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் கவிதா சிங்கின் மகள் ஸ்ரீ கனிஷ்கா சிங், தனது கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக திருநெல்வேலி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் கவிதா சிங்கின் மகள் ஸ்ரீ கனிஷ்கா சிங் திருநெல்வேலி காவல்நிலையத்தில் இன்று நேரில் வந்து புகார் அளித்தார். மேலும், முதல்வரின் தனிப்பிரிவுக்கும் வரதட்சணைப் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.

40 நாள்களுக்கு முன்புதான் நெல்லையில் மிகப் பிரம்மாண்டமாக ஸ்ரீ கனிஷ்காவுக்கும் நெல்லையைச் சேர்ந்த பல்ராம் சிங் என்பவருக்கும் மிகப் பிரமாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான விடியோ ஒன்றை இருட்டுக்கடை அல்வா கடையின் சமூக வலைதளத்தில் வெளியிட்டு, கடையின் நிர்வாகம் சார்பில் வாழ்த்தியவர்களுக்கும், வருகை தந்தவர்களுக்கும் நன்றி தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், திருமணமாகி இரண்டு மாதங்களுக்குள், ஸ்ரீகனிஷ்கா காவல்நிலையத்தில் தனது கணவர் குடும்பத்தார் மீது வரதட்சணைப் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து வழக்குரைஞர் கூறுகையில், இருட்டுக் கடையுடன் கூடுதல் வரதட்சணை கேட்டு கனிஷ்காவை கணவர் வீட்டார் துன்புறுத்தியிருக்கிறார்கள்.

கோவையைச் சேர்ந்த பல்ராம் சிங் என்பவருக்கு கனிஷ்காவுடன் திருமணமான நிலையில், ஒரு சில நாள்களிலேயே அவரது குடும்பத்தார் வரதட்சணை கேட்டு துன்புறுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். இருட்டுக்கடை உரிமையை மாற்றித் தரும்படி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணவரும், அவரது தந்தையும் தங்களது காரில் கனிஷ்காவை அழைத்து வந்து அவரது தாய் வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு, இருட்டுக்கடையின் உரிமை மற்றும் கூடுதல் சொத்துகளை எழுதி வாங்கி வரும்படி அனுப்பி வைத்ததாகவும் வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நெல்லை மாநகர காவல் ஆணையர் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவுக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மலையேற்றம் மேற்கொள்வர்கள் கவனத்துக்கு... 23 வழித்தடங்கள் திறப்பு!

தமிழ்நாட்டில் மலையேற்றத்திற்காக இன்றுமுதல்(ஏப். 16 ) 40 மலையேற்ற வழித்தடங்களில் 23 வழித்தடங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:த... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி பெயர்களில் உள்ள சாதியை நீக்க உத்தரவு!

தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்ததை எ... மேலும் பார்க்க

காலை உணவில் உப்புமாவுக்கு பதில் பொங்கல்! கீதா ஜீவன் அறிவிப்பு!

அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் காலை உணவுத் திட்டத்தில் உப்புமாவுக்கு பதில் பொங்கல் வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் சட்டப்பேரவையில் இன்று (ஏப். 16) அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் சமூ... மேலும் பார்க்க

இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் மகள் கொடுத்திருக்கும் வரதட்சணைப் புகார்! பின்னணி என்ன?

திருநெல்வேலியில் இயங்கி வரும் இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் மகள் ஸ்ரீகனிஷ்கா, தனது கணவர் வீட்டினர் மீது வரதட்சணைப் புகார் அளித்திருக்கிறார்.திருநெல்வேலியில் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா உரிமை... மேலும் பார்க்க

10 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் 10 செ.மீ. மழை!

10 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் ஏப்ரலில் 10 செ.மீ. மழை பெய்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெருவித்துள்ளார்.வங்கக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் சென்னை உள்ளிட்ட புறநகர்... மேலும் பார்க்க

திருடியதாகக் கூறி விசாரணை: கோவை கல்லூரி மாணவி தற்கொலை!

கோவையில் தனியார் கல்லூரி கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி மீது திருட்டுப்பழி சுமத்தியதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோவை பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் பிரப... மேலும் பார்க்க