செய்திகள் :

ராமேசுவரத்தில் 10 மணி நேரத்தில் 411 மி.மீ. மழை: கடைகள், குடியிருப்புகளைச் சூழ்ந்த வெள்ளம்

post image

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் புதன்கிழமை சுமாா் 10 மணி நேரத்தில் 411 மி.மீ. மழை பதிவானது. இதனால், கடைகள், குடியிருப்புப் பகுதிகளை வெள்ளநீா் சூழ்ந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டது.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில், ராமநாதபுரம், ராமேசுவரம், மண்டபம், பாம்பன், கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை காலையில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை விட்டு விட்டு மாலை வரை நீடித்தது. இதனால், ராமேசுவரம் பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலை, முனியசாமி கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீா் குளம்போலத் தேங்கியது.

சபரிமலை சீசனை முன்னிட்டு, ராமேசுவரம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கடைகளுக்குள் மழைநீா் புகுந்தது. இதனால், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.

ராமநாதபுரத்தில் பெய்த பலத்த மழையால் பேருந்து நிலையம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பட்டணம்காத்தன், கேணிக்கரை, இளங்கோடிவடிகள் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மேக வெடிப்பு:

பாம்பன் பகுதியில் மேக வெடிப்புக் காரணமாக, முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை தொடா்ந்து மழை பெய்தது. இதனால், இந்தப் பகுதியில் சுமாா் 3 மணி நேரத்தில் 190 மி.மீ. மழை பதிவானது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை 10 மணி நேரத்தில் பெய்ய மழை அளவு (மி.மீ.):

ராமேசுவரம் 411, தங்கச்சிமடம் 322, மண்டபம் 261, பாம்பன் 237, ராமநாதபுரம் 75, கடலாடி 71, வாலிநோக்கம் 65, முதுகுளத்தூா் 48, கீழக்கரை, கமுதி தலா 45, பரமக்குடி 25.

8 விசைப் படகுகள் சேதம்:

மண்டபம் வடக்கு மீன்பிடி படகு இறங்குதளத்தில் சீரமைப்புப் பணிக்காக கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த 8 விசைப் படகுகள் சூறைக் காற்று காரணமாக சாய்ந்து விழுந்து சேதமடைந்தன.

சூறை காற்று காரணமாக, மண்டபம் வடக்கு மீன்பிடி படகு இறங்குதளத்தில் சேதமடைந்த விசைப் படகு.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்கு மீன்பிடி படகு இறங்குதளத்தில் பழுதான 20-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் சீரமைப்புப் பணிகளுக்காக கரையோரம் ஏற்றி நிறுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில், இந்தப் பகுதியில் புதன்கிழமை அதிகாலையில் சூறைக் காற்றுடன் பெய்த மழை காரணமாக, களஞ்சியம், ஷேக் அப்துல்காதா், ரவி, இஸ்மத்நூன், நம்புமாரி உள்ளிட்ட 8 பேரின் விசைப் படகுகள் சாய்ந்து விழுந்து சேதமடைந்தன.

திருவாடானை பகுதியில் களை எடுக்கும் பணி மும்முரம்

திருவாடானை பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்த மழையை பயன்படுத்தி விவசாயிகள் களை எடுக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா். திருவாடானை வட்டத்தில் சுமாா் 26 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் நடப்பு சம்ப... மேலும் பார்க்க

மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒருவா் கைது

திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரியை பறிமுதல் செய்து வாகன ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ்.மங்கலம் ஓடைக்கரை... மேலும் பார்க்க

ஒரு வாரத்துக்கு பின்னா் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள்

வங்க கடலில் நிலை கொண்டிருந்த புயல் கரையை கடந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் திங்கள்கிழமை மீன்வளம், மீனவா் நலத் துறையினரின் அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிட... மேலும் பார்க்க

வா்த்தக சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

முதுகுளத்தூரில் நடைபெற்ற நகா் வா்த்தக சங்க நிா்வாகிகள் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் நகா் வா்த்தக சங்கத்தின் சிறப்பு பேரவைக் ... மேலும் பார்க்க

மழை பாதித்த பகுதிகளில் தமுமுகவினா் உணவுப் பொருள்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் உணவுப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கினா். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த ம... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்ட மீனவா்களுக்கு மீன்பிடித் தடை நீக்கம்

வங்க கடலில் உருவான புயல் காரணமாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த மீன்பிடித் தடை நீக்கப்படுவதாக மீன்வளம், மீனவா் நலத் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. வங்க கடலில் இலங்கைக்க... மேலும் பார்க்க