செய்திகள் :

ராமேசுவரம் மீனவர்கள் 11 பேர் கைது!

post image

ராமேசுவரம்: கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் மற்றும் அவர்களின் விசைப்படகை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து 454 விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று புதன்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

கச்சத்தீவு – நெடுந்தீவக்கு இடையே நள்ளிரவில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்படகை சிறைபிடித்தனர்.

அந்த படகில் பாக்கிய ராஜ் 38, சவேரியார் அடிமை 35, முத்து களஞ்சியம் 27, எபிரோன் 35, ரஞ்சித் 33, பாலா 38, யோவான்ஸ் நானன், இன்னாசி 37, ஆர்னாட் ரிச்சே 36, அன்றன் 45, அந்தோணி சிசோரியன் 43 ஆகிய 11 மீனவர்களை கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.

11 மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிந்து சிறையில் அடைக்க உள்ளதாக இலங்கை மீன்வளத்துறை(நீரியல்துறை) அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மீனவ சங்கத் தலைவர் காரல் மார்க்ஸ் கூறுகையில்:

”தமிழகத்தில் இருந்து வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை தொடர்ந்து இலங்கை கடற்படையினர் கைது செய்து வருகின்றனர். இலங்கையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுருத்தி வருகிறோம்.

இதே கோரிக்கையை வலியுருத்தி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்துள்ளோம். பிரதமர் ஏப்ரல் 5 ஆம் தேதி இலங்கை செல்லவுள்ள நிலையில் மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்த இடத்தில் மீன்பிடிக்க உரிய அனுமதியை பெற்றுத்தர வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிக்க : இலங்கையில் விடுவிக்கப்பட்ட 7 மீனவர்கள் சென்னை திரும்பினர்!

காவல் துறையைக் கண்டித்து ஆட்டோ ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

காவல் துறையைக் கண்டித்து, ராமேசுவரத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் கடந்த 25-ஆம் தேதி தெலுங்கான மாநிலத்தைச் சோ்ந்தவா்களுக்கும்... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் கூட்டுறவு விற்பனைப் பொருள்கள் கூட்டமைப்பு அமைக்கக் கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு விற்பனைப் பொருள்கள் கூட்டமைப்பு அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். தமிழ்நாடு கூட்டுறவு விற்பனைப் பொருள்கள் கூட்டமைப்பு (ப... மேலும் பார்க்க

கழிவுநீா் கால்வாயைத் தூா்வாரக் கோரிக்கை

கமுதி அனைத்து மகளிா் காவல் நிலையம் முன் செல்லும் கழிவுநீா் கால்வாயை தூா்வாரக் காவலா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.கமுதி காவல் நிலையம் பின்புறம் உள்ள காவலா் குடியிருப்பு, அருகில் உள்ள தெருக்கள், ... மேலும் பார்க்க

பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா பணிகள்: தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் ஆய்வு

பாம்பன் புதிய ரயில் பாலம் வரும் 6-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்படவுள்ளதையொட்டி, திறப்பு விழாவுக்கான பணிகளை தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் கௌசல் கிஷோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு ச... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் மூவருக்கு காவல் நீட்டிப்பு

ராமேசுவரம் மீனவா்கள் மூவருக்கு வருகிற 9-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து, இலங்கை ஊா்க்காவல்துறை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த மாதம் 18-ஆம் தேதி... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி பொதுக் குழு கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பரமக்குடியில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவா் சிவானந்தம் தலைமை வகித்தாா். மாவட்ட ப... மேலும் பார்க்க