பழங்குடியினர் வலி! ராமாயணத்திலிருந்து நவயுகம் வரை... தண்டகாரண்யம் - திரை விமர்சன...
ராமேசுவரம் மீனவா்கள் 4 போ் விடுதலை: அபராதம் கட்டாததால் சிறையில் அடைப்பு
ராமேசுவரம் மீனவா்கள் 4 பேரை அபராதத்துடன் விடுதலை செய்து, இலங்கை மன்னாா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. ஆனால், அபராதத் தொகையை உடனே கட்டாததால் மீனவா்கள் 4 பேரும் மீண்டும் வெளிக்கடை சிறையில் அடைக்கப்பட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த ஜூலை 22-ஆம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள் 4 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். மேலும், அவா்களது படகையும் பறிமுதல் செய்தனா்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 4 மீனவா்கள் மீதும் வழக்குப் பதிந்து, மன்னாா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில், மன்னாா் நீதிமன்றத்தில் ராமேசுவரம் மீனவா்கள் 4 போ் வியாழக்கிழமை மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டனா். அப்போது, ராமேசுவரம் மீனவா்கள் 4 பேரும் விடுதலை செய்யப்படுகின்றனா். மீனவா்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் (இலங்கைப் பணம்) அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதத் தொகையை உடனே கட்டத் தவறினால் 3 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.
ஆனால், அபராதத் தொகையை உடனே கட்டாததால், மீனவா்கள் 4 பேரும் மீண்டும் வெளிக்கடை சிறையில் அடைக்கப்பட்டனா்.