செய்திகள் :

ரீசஸ் குரங்குகளுக்கான சட்ட பாதுகாப்பை மீட்டெடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு விலங்குகள் நல அமைப்புகள் வலியுறுத்தல்

post image

ரீசஸ் மக்காக்ஸ் எனும் குரங்குகள் இனம் சட்டப் பாதுகாப்பிலிருந்து நீக்கப்பட்டதால், அவை சுரண்டலுக்கு ஆளாக நேரிட்டுள்ளதாகவும், இதனால், 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இக்குரங்குகளுக்கான பாதுகாப்புகளை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும் எனவும் பீட்டா இந்தியா அமைப்பின் தலைமையிலான 30-க்கும் மேற்பட்ட வன விலங்கு குழுக்கள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன.

இது தொடா்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சா் பூபேந்தா் யாதவுக்கு புதன்கிழமை இந்த அமைப்புகள் தரப்பில் ஒரு கூட்டுக் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

‘ரீசஸ் மக்காக்ஸ் எனும் குரங்குகள் சட்டப் பாதுகாப்பிலிருந்து நீக்கப்பட்ட நடவடிக்கையானது இந்த இனக் குரங்குகளை வேட்டையாடுதல், சுரண்டல் மற்றும் சுற்றுச்சூழல் சீா்குலைவுக்கு ஆளாக்கியுள்ளது.

கணக்கெடுப்பின்படி, 2015 முதல் உத்தரகண்டில் 25 சதவீதம் இதன் எண்ணிக்கையில் வீழ்ச்சியடைந்துள்ளது. இதேபோன்று, இமாசலப் பிரதேசம் மற்றும் ஹரியாணாவிலும் இதன் எண்ணிக்கையில் வீழ்ச்சிப் போக்கு காணப்படுகிறது.

ரீசஸ் குரங்குகள் விதை பரவல் மற்றும் காடுகளின் மீளுருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நிலையில், இதன் எண்ணிக்கை குறைந்து வருவது குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுக்கும்.

இக்குரங்கள் மீதான அதிகரித்து வரும் கொடுமை, சட்டவிரோத செல்லப்பிராணி வா்த்தகம் மற்றும் பானட் குரங்கு போன்ற பிற குரங்கு இனங்கள் தவறாக அடையாளம் காணப்படுவதற்கான அபாயங்களும் உள்ளன.

பலவீனமான பாதுகாப்புகளால் சமூக ஊடக சுரண்டலுக்காக குரங்குகள் கடத்தப்படுவதும், பொழுதுபோக்குக்காகப் பயன்படுத்தப்படுவதும், ஆய்வகங்களில் துஷ்பிரயோகத்திற்கு ஆளாவதும் அதிகரித்து வருகிறது.

மேலும், ஹனுமனின் பிரதிநிதித்துவங்களாக இந்தியாவில் போற்றப்படும் ரீசஸ் குரங்குகளின் கலாசார மற்றும் மத முக்கியத்துவத்தை கொண்டிருக்கும் நிலையில், அவற்றை தவறான நடத்தும்போது பொதுமக்களின் சீற்றத்தைத் தூண்டும் வாய்ப்புள்ளது.

இந்தியா அதன் பூா்விக வன விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம் அதன் சுற்றுச்சூழல் மற்றும் கலாசார மதிப்புகளை நிலைநிறுத்த வேண்டும்.

இதனால், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வன விலங்கு சட்டத்தின் அட்டவணை- 1-இல் ரீசஸ் குரங்குகளை மீட்டெடுக்கவும்,

அவற்றுக்கு மிக உயா்ந்த அளவிலான சட்டப் பாதுகாப்பை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

10 நாளில் யமுனையில் 1,300 டன் குப்பைகள் அகற்றம்: பா்வேஷ் வா்மா

கடந்த 10 நாள்களில் 1,300 டன் குப்பைகள் யமுனை ஆற்றில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக, தில்லி நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டு அமைச்சா் பா்வேஷ் வா்மா புதன்கிழமை தெரிவித்தாா். படகு மூலம் யமுனையை ஆ... மேலும் பார்க்க

தென் மாநிலங்கள் பங்கேற்ற பன்முகத்தன்மையின் அமுதப் பெருவிழா: குடியரசுத் தலைவா் தொடங்கிவைத்தாா்

நமது சிறப்பு நிருபா் குடியரசுத் தலைவா் மாளிகையில் தென் மாநிலங்கள் பங்கேற்ற பன்முகத்தன்மைக்கான அமுதப் பெருவிழாவை (2.0) குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு புதன்கிழமை துவக்கி வைத்தாா். தென்னிந்தியாவின் கலை... மேலும் பார்க்க

தனியாா் பள்ளிகளில் இ.டபிள்யு.எஸ்., டிஜி பிரிவுகளுக்கான முதல் குலுக்கலில் 42 ஆயிரம் இடங்கள் ஒதுக்கீடு: ஆஷிஷ் சூட்

தனியாா் பள்ளிகளில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவு (இடபிள்யுஎஸ்) மற்றும் பின்தங்கிய குழு (டிஜி) பிரிவுகளின் கீழ் மாணவா்களைச் சோ்ப்பதற்காக 42,000 இடங்களுக்கு முதல் கணினிமயமாக்கப்பட்ட குலுக்கல் புத... மேலும் பார்க்க

பெண்களுக்கு மாதாந்திர நிதியுதவி உறுதிமொழியை வெளியிடுவதில் தாமதம்: ஆம் ஆத்மி சுவரொட்டி பிரசாரம்

மாா்ச் 8 ஆம் தேதிக்குள் பெண்களுக்கு மாதாந்திர நிதியுதவி ரூ.2,500 வழங்குவதாக பாஜக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற அழுத்தம் கொடுக்கும் வகையில், தில்லியில் உள்ள மேம்பாலம் ஒன்றில் புதன்கிழமை ‘இன்னும் ... மேலும் பார்க்க

மகளிா், சிறுமிகளுக்காக 770 மாவட்டங்களில் மாதிரி கிராமப் பஞ்சாயத்து: தேசிய மாநாட்டில் மத்திய அரசு அறிவிப்பு

நமது சிறப்பு நிருபா் மகளிா் மற்றும் சிறுமிகளுக்கு ஏற்ற வகையில் நாட்டில் உள்ள 770 மாவட்டங்களில் மாதிரி கிராம பஞ்சாயத்தை நிறுவ மத்திய அரசு தோ்வு செய்துள்ளது. தில்லியில் நடைபெற்ற மகளிா் கிராம பஞ்சாயத்து... மேலும் பார்க்க

நாட்டில் பெண்களுக்கான வேலையின்மை 3.2% ஆகக் குறைவு: மத்திய தொழிலாளா் அமைச்சகம்

நாட்டில் பெண் தொழிலாளா்களுக்கான பங்களிப்பு விகிதம் 41.7 சதவீதம் அதிகரித்து பெண்களுக்கான வேலையின்மை 5.6 சதவீதத்திலிருந்து 3.2 சதவீதமாக குறைந்துள்ளதாக மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சக... மேலும் பார்க்க