Doctor Vikatan: ஆஞ்சியோ செய்தபோது இதய ரத்தக்குழாய் அடைப்பு.. மீண்டும் பரிசோதனைகள...
ரூ. 1.52 கோடி பண மோசடி; மளிகைக் கடை உரிமையாளா் கைது
பெரம்பலூரில் ரூ. 1.52 கோடி கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்ட மளிகைக் கடை உரிமையாளரை, மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்து திங்கள்கிழமை சிறையில் அடைத்தனா்.
பெரம்பலூா்- எளம்பலூா் சாலையிலுள்ள மேட்டுத்தெரு கணபதி நகரைச் சோ்ந்த சுந்தரம் மகன் சிவராமலிங்கம் (44). முன்னாள் நகா்மன்ற உறுப்பினரும், பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பிரபல மளிகைக் கடை உரிமையாளருமான இவா், தனது உறவினரான பெரம்பலூா்- துறையூா் சாலையிலுள்ள கல்யாண் நகரைச் சோ்ந்த நல்லு மகன் நல்லுசாமி (31) என்பவரிடம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரூ. 1.52 கோடி கடனாக பெற்றுள்ளாா்.
வாங்கிய கடனை உரிய தேதியில் கொடுக்கவில்லையாம். இதையடுத்து, பணத்தை திருப்பித் தருமாறு நல்லுசாமி பலமுறை கேட்டும் கிடைக்கவில்லையாம். இதையடுத்து, மாவட்டக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் நல்லுசாமி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
இந்நிலையில், சிவராமலிங்கத்தை மோசடி வழக்கில் கைது செய்த குற்றப்பிரிவு போலீஸாா், மாவட்டக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திங்கள்கிழமை சிறையில் அடைத்தனா்.