செய்திகள் :

ரூ. 20 கோடியா? ஒரு ரூபாய்கூட வாங்கவில்லை: ஆமீர் கான்

post image

கூலி திரைப்படத்தில் சம்பளம் எதுவும் வாங்கவில்லை என ஆமீர் கான் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் - ரஜினி கூட்டணியில் வெளியான கூலி திரைப்படம் கதை, திரைக்கதையால் ரசிகர்களிடம் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. இருந்தும், முதல்நாள் வசூலாக உலகளவில் ரூ. 151 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

அதேநேரம், பல லாஜிக் பிரச்னைகள் இருப்பதால் இப்படத்தைக் கேலி செய்தும் பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, இப்படத்தில் நடிகர் ஆமீர் கான் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க ரூ. 20 கோடியைச் சம்பளமாகப் பெற்றதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், இதுகுறித்து பேசிய ஆமீர் கான், “கூலி திரைப்படத்தில் நான் ரூ. 20 கோடி சம்பளம் பெற்றதாகத் தவறான தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் மேல் பெரிய அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன். அவருடன் நடித்ததே பரிசுதான். அதனால், சம்பளம் என எதுவும் வாங்கவில்லை. சொல்லப்போனால், அதைப்பற்றி யோசிக்கவும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: தகுதிக்கு மீறி கொண்டாடப்படும் இயக்குநர்... விமர்சனத்திற்கு ஆளாகும் லோகேஷ் கனகராஜ்!

actor aamir khan spokes about his salary for coolie movie

ஷங்கர், மணிரத்னத்தின் தோல்வி பயத்தைத் தருகிறதா? ஏ. ஆர். முருகதாஸ் பதில்!

இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் மூத்த இயக்குநர்கள் குறித்து பேசியுள்ளார். இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் பல வெற்றிப்படங்களைக் கொடுத்தாலும் இறுதியாக அவர் இயக்கங்களில் வெளியான தர்பார், சிக்கந்தர் ஆகிய திரைப்பட... மேலும் பார்க்க

அலெஹாந்த்ரோ இனாரிட்டு அழைத்தும் வாய்ப்பை மறுத்த ஃபஹத்! ஏன்?

ஆஸ்கர் விருதுவென்ற இயக்குநர் அலெஹான்ட்ரோ இனாரிட்டு பட வாய்ப்பை ஃபஹத் ஃபாசில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ஃபஹத் ஃபாசில் இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராகப் பார்க்கப்படுகிறார். இவர் நடிக்... மேலும் பார்க்க

மாரீசன் ஓடிடி தேதி!

மாரீசன் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர்கள் வடிவேலு, ஃபஹத் ஃபாசில் நடிப்பில் வெளியான திரைப்படம் மாரீசன். சஸ்பென்ஸ் திரில்லராக உருவான இப்படத்தை சுதீஷ் சங்கர் இயக்கியிர... மேலும் பார்க்க

ஹிந்தியில் ரீமேக்காகும் பெருசு!

பெருசு திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் இளங்கோ ராம் இயக்கிய திரைப்படம் பெருசு. கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரித்த இந்தப் பட... மேலும் பார்க்க

இந்திய குத்துச்சண்டை அணிகள் சீனா பயணம்

சீனாவில் நடைபெறவுள்ள பெல்ட் அன்ட் ரோடு சா்வதேச யூத் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பதற்காக 59 போ் கொண்ட இந்திய ஆடவா், மகளிா் அணிகள் புறப்பட்டு சென்றன. சீனாவின் ஜின்ஜியாங் தலைநகா் உரும்கியில் யு17, ... மேலும் பார்க்க

டுரண்ட் கோப்பை: அரையிறுதியில் ஷில்லாங் லஜோங்

இந்தியன் ஆயில் டுரண்ட் கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதிக்கு ஷில்லாங் லஜோங் எஃப்சி அணி தகுதி பெற்றது. நாட்டின் பழைமையான கால்பந்து போட்டிகளில் ஒன்றான டுரண்ட் கோப்பையின் 134ஆவது ஆண்டு போட்டி பல்வேறு... மேலும் பார்க்க