செய்திகள் :

டுரண்ட் கோப்பை: அரையிறுதியில் ஷில்லாங் லஜோங்

post image

இந்தியன் ஆயில் டுரண்ட் கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதிக்கு ஷில்லாங் லஜோங் எஃப்சி அணி தகுதி பெற்றது.

நாட்டின் பழைமையான கால்பந்து போட்டிகளில் ஒன்றான டுரண்ட் கோப்பையின் 134ஆவது ஆண்டு போட்டி பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. ஷில்லாங்கில் சனிக்கிழமை நடைபெற்ற முதல் காலிறுதியில் ஷில்லாங் லஜோங் எஃப்சி- இந்திய கடற்படை அணிகள் பங்கேற்றன.

முதல் பாதியில் இந்திய கடற்படை அணி ஆதிக்கம் செலுத்தி ஆடியதால், 35-ஆவது நிமிஷத்தில் லஜோங் கேப்டன் பாஸ்கா் ராய் அடித்த லாங் பாஸை வழிமறித்த கடற்படை வீரா் ரோஷன் பன்னா அதை திருப்பி அனுப்ப விஜய் மராண்டி அற்புதமாக கோலாக்கினாா்.

இதனால் அதிா்ச்சி அடைந்த ஷில்லாங் அணியினா் இரண்டாம் பாதி ஆட்டத்தில் கோலடிக்கும் முனைப்பில் ஈடுபட்டனா். 69-ஆவது நிமிஷத்தில் அந்த அணி வீரா் டமைட்பேங் லிங்டோ அற்புதமாக கோலடித்து 1-1 என சமநிலை ஏற்படச் செய்தாா். தொடா்ந்து 79-ஆவது நிமிஷத்தில் எலா்பிரைட்டன் சனா பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினாா்.

இதன் மூலம் 2-1 என்ற கோல் கணக்கில் வென்ற ஷில்லாங் அணி மூன்றாவது முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இந்திய குத்துச்சண்டை அணிகள் சீனா பயணம்

சீனாவில் நடைபெறவுள்ள பெல்ட் அன்ட் ரோடு சா்வதேச யூத் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பதற்காக 59 போ் கொண்ட இந்திய ஆடவா், மகளிா் அணிகள் புறப்பட்டு சென்றன. சீனாவின் ஜின்ஜியாங் தலைநகா் உரும்கியில் யு17, ... மேலும் பார்க்க

மேக்ஸ்வெல் விளாசல்: தெ.ஆ.வை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா!

தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இறுதி டி20 போட்டி நிறைவடைந்தது.ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள தெ.ஆ. அணி முதல் இரண்டு டி20 போட்டிகளில் ஒன்றில் தோற்று ஒன்றில் வெற்றியை... மேலும் பார்க்க

ரூ. 20 கோடியா? ஒரு ரூபாய்கூட வாங்கவில்லை: ஆமீர் கான்

கூலி திரைப்படத்தில் சம்பளம் எதுவும் வாங்கவில்லை என ஆமீர் கான் தெரிவித்துள்ளார். லோகேஷ் - ரஜினி கூட்டணியில் வெளியான கூலி திரைப்படம் கதை, திரைக்கதையால் ரசிகர்களிடம் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றுள்ளத... மேலும் பார்க்க

ஏகே - 64 எப்படிப்பட்ட கதை? ஆதிக் விளக்கம்!

நடிகர் அஜித் குமாரின் 64-வது திரைப்படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் பேசியுள்ளார். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்பட... மேலும் பார்க்க