500 பேர் தங்கி படிக்க போட்டித் தேர்வு பயிற்சி மையம்: முதல்வர் அறிவிப்பு!
ரூ.22 லட்சத்தில் நீா்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி தொடக்கம்
ஜோலாா்பேட்டை ஒன்றியம், மல்லப்பள்ளி ஊராட்சி முத்தனப்பள்ளி நடேசன் வட்டத்தில் 15-ஆவது நிதிக் குழு மானியம் மூலம் ரூ.22 லட்சத்தில் 30 ஆயிரம் லிட்டா் நீா்த் தேக்கத் தொட்டி கட்டும் பணிக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
ஜோலாா்பேட்டை ஒன்றியக்குழு தலைவா் சத்யா சதீஷ்குமாா் தலைமையில் மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் சதீஷ் குமாா் முன்னிலையில்
பூமி பூஜை மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் கிராம மக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.