செய்திகள் :

ரூ.300 கோடி வசூலைக் கடந்த ஹவுஸ்ஃபுல் 5!

post image

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரின் ஹவுஸ்ஃபுல் - 5 திரைப்படம் ரூ. 300 கோடியைக் கடந்துள்ளது.

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் - இயக்குநர் தருண் மன்சூகானி ஆகியோரின் கூட்டணியில் ஹவுஸ்ஃபுல் - 5 திரைப்படம் உருவானது.

சஜித் நதியாத்வாலா தயாரித்த இந்தப் படத்தில், நடிகர்கள் அபிஷேக் பச்சன், ரித்தேஷ் தேஷ்முக், சஞ்சய் தத், ஜாக்கி ஷெரோஃப், சோனம் பஜ்வா மற்றும் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

கடந்த ஜூன் 6 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வந்தது.

இந்நிலையில், இந்தப் படத்தின் வசூல் உலக அளவில் ரூ.300 கோடியும் இந்திய அளவில் ரூ.200 கோடியும் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த 2010-ம் ஆண்டு ஹவுஸ்ஃபுல் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. இதைத் தொடர்ந்து, 2012, 2016, 2019 ஆகிய ஆண்டுகளில் வரிசையாக வெளியான அடுத்தடுத்த பாகங்களும் வெற்றியடைந்தன.

Housefull 5 movie collection poster.
ஹவுஸ்ஃபுல் 5 படத்தின் வசூல் போஸ்டர்.

சோனம் பாஜ்வா இந்தப் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகியதும் குறிப்பிடத்தக்கது.

Bollywood actor Akshay Kumar's film Housefull - 5 has crossed Rs. 300 crore.

தமிழ் சீரியலின் மறுஉருவாக்கமா? புதிய தொடர் ஆட்டோ விஜயசாந்தி!

தெலுங்கு மொழியில் ஆட்டோ விஜயசாந்தி என்ற பெயரில் புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. இந்தத் தொடரில் நாயகி ஆட்டோ ஓட்டுவதால், தமிழில் ஒளிபரப்பாகிவரும் வீரா, வினோதினி மற்றும் தனம் தொடரில் ஏதேனுமொரு தொடரின் மறு... மேலும் பார்க்க

ஆனி திருமஞ்சனம்: தஞ்சை பெரிய கோயிலில் நடராஜருக்குச் சிறப்பு அபிஷேகம்!

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.ஆனித் திருமஞ்சனம் ஸ்ரீ நடராஜருக்கு உரி... மேலும் பார்க்க

ஹிட்லருக்கு ஆதரவாக பாடல்..! ஆஸி.யில் நுழைய அமெரிக்க பாடகருக்குத் தடை!

அமெரிக்காவைச் சேர்ந்த ராப் இசைக் கலைஞர் கன்யா வெஸ்ட் ஆஸ்திரேலியாவில் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ராப் இசைக் கலைஞரான கன்யா வெஸ்ட் சமீபத்தில் அடோல்ஃப் ஹிட்லரை ஆதரித்து ’ஹெய்ல் ஹிட்லர்... மேலும் பார்க்க

சமையல் நிகழ்ச்சியில் கலக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை!

சிறகடிக்க ஆசை தொடரில் நாயகியாக நடித்துவரும் நடிகை கோமதி பிரியா, சமையல் நிகழ்ச்சியில் களமிறங்கியுள்ளார். ஏற்கெனவே தமிழ், மலையாளம் என இரு மொழித் தொடர்களில் அடுத்தடுத்து நடித்துவரும் நிலையில், தெலுங்கு ம... மேலும் பார்க்க

ஏகே - 64 அறிவிப்பு எப்போது?

நடிகர் அஜித் குமாரின் அடுத்தபடம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.குட் பேட் அக்லி திரைப்படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக அஜித் குமார் யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்பதில் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறத... மேலும் பார்க்க

பிரசாந்த் நீல் இயக்கத்தில் அல்லு அர்ஜுன்!

நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கேஜிஎஃப் படத்தால் இந்தியளவில் பிரபலமான இயக்குநர் பிரசாந்த் நீல், தொடர்ந்து சலார் படத்தை இயக்கினார். த... மேலும் பார்க்க