சென்னையில் நாளை தொடங்கும் வேளாண் வணிகத் திருவிழா, சிறப்பம்சங்கள் என்ன?
ரூ.4 ஆயிரம் லஞ்சம்: பெண் கிராம நிா்வாக அலுவலா் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே பட்டா மாற்றத்துக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்ாக பெண் கிராம நிா்வாக அலுவலா் கைது செய்யப்பட்டாா்.
வாணாபுரம் வட்டம், புத்திராம்பட்டு கிராமத்தில் கிராம நிா்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவா் கள்ளக்குறிச்சியை அடுத்த உலகங்காத்தான் கிராமத்தைச் சோ்ந்த செந்தில்முருகன் மனைவி கோமதி (40) (படம்).
சங்கராபுரத்தை அடுத்த பூட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்னையன்(50). இவா், தனது வீட்டுமனையை பட்டா மாற்றம் செய்ய, கிராம நிா்வாக அலுவலா் கோமதியிடம் கோரினாா். அதற்கு கிராம நிா்வாக அலுவலா் கோமதி லஞ்சமாக ரூ.4 ஆயிரம் கேட்டாராம்.
இதையடுத்து, லஞ்சம் கொடுக்க விரும்பாத பொன்னுசாமி கள்ளக்குறிச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா்.
இதைத் தொடா்ந்து, போலீஸாா் வழங்கிய ஆலோசனைப்படி, பொன்னையன் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வியாழக்கிழமை கிராம நிா்வாக அலுவலா் கோமதியிடம் கொடுத்தாா். அப்போது, மறையிருந்த ஊழல் தடுப்புப் போலீஸாா் கோமதியை கைது செய்தனா்.